மிக்ஸியில் அரைக்காமல் கிரேப் ஜூஸ் எப்படி போடனும் தெரியுமா..? மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லி தரும் டிப்ஸ்…… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கிரேப் ஜூஸ் பலரும் விரும்பி குடிக்கும் சுவை நிறைந்தது. ஆனால் அதை வீட்டில் செய்ய முயற்சித்தால் அதே சுவை கிடைக்காது. இதனால் பலரும் முயற்சியை கைவிட்டுவிடுவார்கள். ஆனால் மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி உங்களுக்காகவே ரெஸ்டாரண்டுகளில் குடிக்கும் கிரேப் ஜூஸ் சுவை மாறாமல் அப்படியே செய்து காட்டுகிறார். நீங்களும் டிரை பண்ணி பாருங்க…

தேவையான பொருட்கள்

கருப்பு திராட்சை – 1கிலோ
தண்ணீர் – 6 கப்
சர்க்கரை – 1/4 கப்
எலுமிச்சை – 1 1/2

செய்முறை :

முதலில் திராட்சைகளை பக்குவமாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் திராட்சைகள் மூழ்கும் வரை தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வைத்து 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் அதன் தோல் நீங்கி குழைந்த பதத்தில் இருக்கும். அப்போது கரண்டியை கொண்டு அழுத்தி நன்கு குழைய வைக்க வேண்டும்.

அப்போது அதன் சாறு நன்கு இறங்கி கூழ் போல் இருக்கும். பின் அதை ஒரு வடிகட்டியில் வடித்துக்கொள்ளுங்கள்.

பிரெட் , சப்பாத்தி என எதுக்கும் தடவி சாப்பிடலாம் பைனாப்பிள் ஜாம் : ஃபுட் கலரிங், கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே செய்து கொடுங்கள்…

வடிகட்டிய திராட்சை சக்கையை மீண்டும் ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி இறுக்கிக்கொள்ள மீதமிருக்கும் சாறு இறங்கிவிடும்.

இப்போது அந்த தண்ணீரை மீண்டு பாத்திரத்தில் ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வையுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அதை அப்படியே கீழே இறக்கி ஆற வையுங்கள். நன்கு ஆறியதும் எலுமிச்சை சாறும் ஊற்றி கிளறுங்கள். பின் கிளாஸ் ஜாரில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்து மூடி விடுங்கள். குளிர்ச்சியானதும் அதை ஒரு கிளாசில் ஊற்றி குடிக்கலாம்.

அவ்வளவுதான் கிரேப் ஜூஸ் தயார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Source: https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-make-grape-juice-madras-samayal-steffi-tips-esr-571495.html