வெள்ளநீரால் சூழப்பட்ட சென்னை.. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை பார்வையிடுகிறார்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்தது. சென்னை முழுவதுமே முற்றிலுமாக முடங்கியது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். தற்போது சென்னையில் வெள்ள பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மழை, வெள்ள பாதிப்புகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை பார்வையிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த பெருமழை மற்றும் இன்று கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பாதிப்படைந்த மக்களைக் காணவும், நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சித் தொண்டர்களோடு தன்னை இணைத்துக்கொள்ளவும் நமது கட்சித் தலைவர் ‘நம்மவர்’ திரு.கமல் ஹாசன் அவர்கள், நாளை (12.11.2021) காலை 11 மணியளவில் வேளச்சேரியிலிருந்து புறப்பட்டு தி.நகர் வழியாக சென்னை சென்ட்ரல் நிலையம் பாலம் சத்தியமூர்த்தி நகர் வரை பயணிக்கிறார்.

மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், அவர்களின் குறைகளை அறிந்து அரசுக்குத் தெரிவித்து உதவிகள் பெற்றுத் தரவும் நம்மவர் நாளை வருகை தருகிறார்.
கமல்ஹாசனின் பயண விவரம்:
1) 11.00 AM – ராம் நகர் (வேளச்சேரி சென்னை சில்க்ஸ் எதிரில்).
2) 11.15 AM – அம்பேத்கர் நகர், வேளச்சேரி.
3) 12.00 AM – தாமஸ் ரோடு, (தி.நகர் போக் ரோடு அருகில்).
4) 1.00 P.M – சத்தியமூர்த்தி நகர் ( சென்னை சென்ட்ரல் பாலம் அருகில்)

English summary
MNM leader kamalhasan will visit the Chennai rain and flood areas tomorrow It has been announced that Kamal Haasan, the makkal needhi maiam leader will visit the Chennai rain and flood areas tomorrow. Currently, the flood damage in Chennai has reduced slightly

Source: https://tamil.oneindia.com/news/chennai/mnm-leader-kamalhasan-will-visit-the-chennai-rain-and-flood-areas-tomorrow-438720.html