சென்னை டூ கோவை, பெங்களூரு ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • வேலூர் பொன்னை ஆறு மேம்பாலத்தில் விரிசல்
  • சென்னை – பெங்களூரு, கோவை – சென்னை ரயில்கள் ரத்து
  • மைசூரு – சென்னை ரயில் காட்பாடி வரை இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் பெய்த கனமழை பெய்தது. இதனால் பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதனிடையே, முகுந்தராயபுரம் – திருவலம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே 1857-ம் ஆண்டு கருங்கற்கலால் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விரிசல் ஏற்பட்ட பகுதியில் சென்னை கோட்ட ஒருங்கிணைப்பு பொறியாளர் ராம் பிரசாத் ராவ் தலைமையிலான பொறியாளர் மற்றும் ஊழியர்கள் கொண்ட 60க்கும் மேற்பட்ட குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மணல் மூட்டைகள், சாக்குப்பைகளில் ஜல்லிகளை நிரப்பி பாலத்தின் கீழ் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மூட்டைகளை அடுக்கி மட்டப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை – சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, திருவனதபுரம், கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் உள்ளிட்ட 23 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நாளை(டிச.25) முதல் நாளை மறுதினம் டிச.26 வரை 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சற்று முன் அறிவித்துள்ளது.

பொன்னை ஆற்று ரயில்வே பாலத்தில் விரிசல்.! மூன்று ரயில்கள் ரத்து.

அதன்படி, 12007 சென்னை சென்ட்ரல் – மைசூரூ, 12008 மைசூரு – சென்னை சென்ட்ரல், 12243 சென்னை சென்ட்ரல் – கோவை, 12244 கோவை – சென்னை சென்ட்ரல், 12027 பெங்களுரூ – சென்னை சென்ட்ரல், 12028 சென்னை சென்ட்ரல் – பெங்களுரூ, 22649 சென்னை சென்ட்ரல் – ஈரோடு, 22650 ஈரோடு – சென்னை சென்ட்ரல், 22637 சென்னை சென்ட்ரல் – மங்களுரூ, 22638 மங்களுரூ – சென்னை சென்ட்ரல், 16085 அரக்கோணம் – ஜோலார்பேட்டை, 16086 ஜோலார்பேட்டை – அரக்கோணம், 12671 சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ரயில்கள் டிசம்பர் 26-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில், 12695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம், 12696 திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் டிசம்பர் 25-ம் தேதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 12610 மைசூரூ – சென்னை சென்ட்ரல், 12608 பெங்களுரூ – சென்னை, 12680 கோவை – சென்னை ரயில்கள் காட்பாடி ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-mangalore-bangalore-chennai-trains-canceled-till-26th-due-to-bridge-crack-southern-railway-announces/articleshow/88477727.cms