சரியும் R வேல்யூ.. குறைகிறதாம் கொரோனா.. சென்னை ஐஐடி கொடுத்த ஆறுதல் தகவல்.. அதென்ன R வேல்யூ ? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் வூகான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பரவியது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளின் பொருளாதார அரசியல் கட்டமைப்பை அசைத்துப் பார்த்த கருணா தற்போது வரை தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை.

பிக் பாஸ் தமிழ் 5:கண்கலங்கி அழுத ராஜுவின் தாய்...! அந்த நொடியிலும் ராஜுவின் செயல் !பிக் பாஸ் தமிழ் 5:கண்கலங்கி அழுத ராஜுவின் தாய்…! அந்த நொடியிலும் ராஜுவின் செயல் !

தற்போது கொரோனா மூன்றாவது அலை பரவிவரும் நிலையில் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் ஜனவரி மாதத்திலேயே பாதிப்பு அதிகரித்தது தற்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு குறைவு

இந்நிலையில் இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவலை கண்டறிய பயன்படும் ஆர் வேல்யூ கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததை விட ஜனவரி 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வாரத்தின்படி குறைந்துள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர் வேல்யூ என்பது கொரோனா வைரஸ் பரவலை கணக்கிடுவதற்காக ஒரு வழி ஆகும்.

ஆர் வேல்யூ என்றால் என்ன?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மற்ற நபர்களுக்கு பரப்பும் எண்ணிக்கையை குறிப்பதே ஆர் வேல்யூ ஆகும் அதாவது பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடமிருந்து எத்தனை பேருக்கு அந்த பாதிப்பு பரவுகிறது என்பது வைத்து இது கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு ஒருவரிடம் இருந்து 10 பேருக்கு பரவினால் ஆர் வேல்யூ 10 ஆகவும், 100 பேருக்கு பரவினால் 100ஆகவும் இருக்கும்.

சென்னை ஐஐடி ஆய்வு

ஆர் வேல்யூ ஒன்றுக்கு குறைவாக இருந்தால் கொரோனா பரவல் குறைவாக இருக்கிறது என்றும், ஒன்று அல்லது அதற்கு மேலாக செல்லும் போது வேகம் அதிகரிக்கிறது என்பதைக் குறிக்கிறது . இந்த நிலையில் இந்தியாவின் ஆர் வேல்யூவை அடிப்படையாகக் கொண்டு சென்னை ஐஐடியின் கணிணித்துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாதிப்பு குறைகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்த ஆர் வேல்யு ஜனவரி 7 முதல் 13ம் தேதி வாரத்தில் இல்லை, மாறாக ஆர் வேல்யு குறைந்துள்ளது என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மும்பையில் தற்போது ஆர் வேல்யூ 1.3 ஆகவும், டெல்லியில் 2.5 ஆகவும், சென்னையில் 2.4 ஆகவும், கொல்கத்தாவில் 1.6 ஆகவும் ஆர் வேல்யூ இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் ஆர் வேல்யூ 2 முதல் 4 என்ற அளவுகளில் இருந்த நிலையில் தற்போது ஜனவரி 7ஆம் தேதி முதல் 13 தே வரையிலான ஆர் வேல்யு பல்வேறு இந்தியாவிலுள்ள நகரங்களில் குறைந்துள்ளதன் காரணமாக தொற்றின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது என சென்னை ஐஐடி நடத்திய அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

English summary
A study conducted by IIT Chennai has revealed that the spread of corona virus in India is declining.

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-study-conducted-by-iit-chennai-has-revealed-that-the-spread-of-corona-virus-in-india-is-declining-445600.html