`மெட்ராஸ் ஐ’யா? `கோவிட் ஐ’யா? – கண்கள் பத்திரம் – 1 – Vikatan

சென்னைச் செய்திகள்

கண்வலி என்றால் கொரோனாதானா?

இந்த அறிகுறிகளுடன் உங்களுக்கு கன்ஜங்டிவிட்டிஸ் இருப்பது உறுதியானால் உங்களுக்கு நிச்சயம் கோவிட் தொற்றும் இருக்கும் என அர்த்தமில்லை. கொரோனா தொற்றும் இருக்கலாம் என்றாலும் வேறுவிதமான வைரஸ், பாக்டீரியா தொற்றுகளோ, அலர்ஜியோகூட காரணங்களாகலாம். கன்ஜங்டிவிட்டிஸ் பாதிப்பானது அதிகபட்சமாக ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும். கன்ஜங்டிவிட்டிஸ் அறிகுறிகளோடு காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

Eyes (Representational Image)
pixabay

கோவிட் தொற்றின் காரணமாக ஒருவருக்கு கன்ஜங்டிவிட்டிஸ் பாதித்திருந்தால், அந்த நபர் தன் கண்களைத் தொட்டுவிட்டு, மற்ற நபர்களைத் தொட்டாலோ, பரப்புகளைத் தொட்டாலோ அவர்களுக்கும் அந்தத் தொற்று பரவும். எனவே, இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் முகத்தை, வாயை, மூக்கை, கண்களைத் தொடாமலிருப்பது பாதுகாப்பானது.

கண்களையும் கவனியுங்கள்

அடிக்கடி கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதைப் போலவே கோவிட் காலத்தில் கண்களுக்கும் பாதுகாப்பு தேவை.

கொரோனா காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் அணிவது பாதுகாப்பானதா என்று நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணாடி அணிவதுதான் பாதுகாப்பானதா, லென்ஸை தவிர்க்க வேண்டுமா என்கிறார்கள். லென்ஸை அணிவதற்கு முன் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதேபோல லென்ஸை அகற்றுவதற்கு முன்பும் கைகளைக் கழுவ வேண்டும். கண்ணாடி, லென்ஸ் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.

நீங்கள் கண்ணாடி அணிகிறவர் என்றால் கூடியவரை அதைக் கழற்ற வேண்டாம். வாகனம் ஓட்டும்போதும், பயணத்தின்போதும் சன் கிளாஸ் அணியலாம். தொற்றுக்குள்ளானவர்களுடன் இருக்கும்போது பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிவதும் ஓகே.

அடிக்கடி கண்களைக் கசக்க வேண்டாம்.

– பார்ப்போம்…

– ராஜலட்சுமி

Source: https://www.vikatan.com/health/healthy/what-is-covid-eye-infection-that-is-prevalent-in-many-covid-patients