மத்திய சென்னை, தென் சென்னையில் பாஜக வாக்கு வங்கி அதிகரிப்பு.. அதிமுகவிற்கு எச்சரிக்கை மணி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நடந்துமுடிந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் வென்றிருந்தாலும், அதிக அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிப்பட்டியலின்படி, தாங்கள் தான் தமிழகத்தின் மூன்றாவதுகட்சி என்று பாஜக தெரிவித்து வருகிறது.

கோவை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை..கோவை மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை..

பாஜக‌

நடந்து முடிந்த தேர்தலில் சொல்லத்தகுந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது.. குறிப்பாக, 21 வருடங்களுக்கு பிறகு சென்னை மாநகராட்சியில் மீண்டும் தடம் பதித்துள்ளது. 42 பேரூராட்சி வார்டுகளையும், 56 நகராட்சி வார்டுகளையும், 22 மாநகராட்சி வார்டுகளையும் கைப்பற்றி, 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றி

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. தனியாக இந்த தேர்தலை எதிர்கொண்டதால், பாஜகவுக்கு பெரிய அடி விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதிமுக-வை வாஷ் அவுட் செய்யும் அளவுக்கு பாஜக வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல கொங்கு மண்டலத்தில், அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாஜக பல இடங்களில் இரண்டாவது இடம் வந்துள்ளது.

சென்னை

சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பாக சென்னை மாநகராட்சித் தேர்தலில் 134வது வார்டில் போட்டியிட்ட ‘கோட்ஸே’ புகழ் உமா ஆனந்தன், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னை மாநகராட்சியின் பாஜகவின் ஒரே கவுன்சிலர் இவர் தான். சென்னை மாநகராட்சியில் 20 இடங்களில் பாஜக டெப்பாசிட் பெற்றிருக்கிறது. குறிப்பாக மத்திய சென்னை மற்றும் தென் சென்னையில் அதிக அளவில் பாஜகவுக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

வளர்ச்சி

கோடம்பாக்க, அடையாறு, பெருங்குடி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக 16 முதல் 20 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதனால் பாஜக இனி வரும் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், தனித்து களமிறங்கும். அதிமுகவின் ஓட்டுகள் கணிசமாக திமுக-வுக்கு சென்று விட்டது. அதிமுக மேல் அதிருப்தியில் இருப்பவர்களும், திமுக மேல் அதிருப்தியில் இருப்பவர்களும், சென்னையில், பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். கடைசி நேரத்தில் பாஜக தனித்து களம் கண்டாலும் இந்த வெற்றி அவர்களுக்கு புது தெம்பை வழங்கி இருக்கிறது. அதிமுகவின் ஓட்டு பாஜகவுக்கு சென்றுள்ளது. இனி பாஜகவுடன் கூட்டணி வைக்காமல், அதிமுகவால் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே என்கிறார்கள் வல்லுனர்கள்.

மத்திய -தென் சென்னை

மத்திய -தென் சென்னை பகுதிகளில் பாஜக வளர்ச்சி அடைந்திருக்கிறது. சென்னையில் அதிமுகவின் ஓட்டுகள் திமுகவுக்கு போய்விட்டது. அதனால் சென்னையைப் பொறுத்தவரை பாஜக இனி அதிமுக-வுடன் கூட்டணி வைக்காது. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. துறைமுகம், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வலுவாக இருப்பதை இந்த தேர்தல் காட்டியுள்ளது. மத்திய மற்றும் தென் சென்னையில் பாஜக-வின் இந்த வளர்ச்சி யாரும் எதிர்பார்க்காதது தான்.

English summary
The BJP, which stood alone in the by-elections, has received unexpected votes. Although the BJP won only one seat in the Chennai municipal elections, it has won a large number of votes.

Source: https://tamil.oneindia.com/news/chennai/tn-local-body-election-bjp-is-growing-in-chennai-450005.html