ரூ.2.60 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா? – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை துறைமுகம்

சென்னையில் செயல்பட்டு வரும் சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள துணை மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Chief Medical Officer 

காலியிடங்கள்: 01 

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary, Chennai Port Authority, No.1 Rajaji Salai, Chennai – 600 001 

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.03.2022 

மேலும் விபரங்கள் அறிய www.chennaiport.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Source: https://www.dinamani.com/employment/2022/feb/26/jobs-notification-chennai-port-trust-recruitment-2022-apply-for-1-vacancies-of-chief-medical-officer-3798776.html