வேற லெவலில் மாறப்போகும் சென்னை ORR சாலை.. என்னென்ன வசதிகள் வரப்போகிறது தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: 62 கி.மீ வெளிவட்ட சாலையுடன் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட இருக்கும் சாலை மாநகர வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிக்கும் என்று தொழிற்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏவுக்கு உட்பட்ட மாநகரத்தின் கிழக்குப்பகுதியில் வெளிவட்ட சாலையை ஒட்டிய 50 மீட்டர் நீளம் உள்ள 270 ஹெக்டேர் பரப்பளவை உடையது.

இதன் அருகாமையில் அமைந்துள்ள அனைத்து பகுதிகளுக்கும் நடைபாதையுடன் கூடிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் தொழிற்துறையும் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கேப்டன் என் உறுப்புகளை எடுத்துக்கோங்க.. விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் உருக்கமான கோரிக்கை.. நெகிழ்ச்சிகேப்டன் என் உறுப்புகளை எடுத்துக்கோங்க.. விஜயகாந்த்துக்கு ரசிகர்கள் உருக்கமான கோரிக்கை.. நெகிழ்ச்சி

ஒரு சாலையில் இவ்வளவு வசதியா?

வெளிவட்ட சாலையை இணைக்கும் பாதைக்காக மட்டும் 122 மீட்டர் நீளம் கொண்ட நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில் 50 மீட்டர் சாலை மேம்பாட்டுக்காகவும், அதில் 25 மீட்டர் சரக்கு வாகனங்கள் செல்வதற்காகவும் பிரிக்கப்பட உள்ளது. அதேபோல் வலது மற்றும் இடது பக்கங்களில் உள்ள சரக்கு வாகன பாதைகளுக்கு மத்தியில் 22 மீட்டர் பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட உள்ளது, மீதமுள்ள 50 மீட்டர் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வதற்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்புகள் பெருகும்

இது தொடர்பாக ஜே.எல்.எல். மேற்கு ஆசிய நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஷங்கர் தெரிவிக்கையில், “இத்திட்டங்களின் காரணமாக வெளிவட்ட சாலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைய உள்ளன. பொருளாதார மையமாக அவை மாறுவதுடன் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம் பட்டாபிராம் டைடல் பார்க்கிற்கு எளிதில் செல்ல முடியும்.” என்றார்.

நல்ல முதலீடுகள் கிடைக்கும்

கட்டுமான நிறுவனமான கிரெடாய் சென்னையின் தலைவர் பாதம் துகார் கூறுகையில், “இந்த வெளிவட்ட சாலை திட்டம் சென்னை துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் இணைக்கும். இந்த பகுதியில் முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கு கிரெடாய் நிறுவனம் அரசுடன் இணைந்து பணியாற்றும்.” என்றார்.

PTR Palanivel Switches to English for a wider reach in Budget 2022 | OneIndia Tamil

அறிமுகம் செய்யப்பட உள்ள திட்டங்கள்

வண்டலூர் முதல் முடிச்சூர் வரை

ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரம் (20-30 ஏக்கர்)
வண்டலூர் ஏரியைச் சுற்றி பொழுதுபோக்கு மண்டலம் (5-10 ஏக்கர்)

முடிச்சூர் முதல் குன்றத்தூர் வரை
வழித்தட வசதிகள் (6-7 ஏக்கர்)
தொழில்துறை வீடுகள் (10-15 ஏக்கர்)

குன்றத்தூர் முதல் பூந்தமல்லி வரை
MICE (30-40 ஏக்கர்)
ஒருங்கிணைந்த கலவை நகரம் (40 – 50 ஏக்கர்)
பந்தய தடம் (250 – 300 ஏக்கர்)

பூந்தமல்லி முதல் நெமிலிச்சேரி வரை
சிப்காட் தொழில் பூங்கா (250 – 500 ஏக்கர்)

நெமிலிச்சேரி முதல் மோரை வரை
அறிவு மையம் மற்றும் சிறப்பு மையம் (10-15 ஏக்கர்)

மோரை முதல் ரெட் ஹில்ஸ் வரை
மையப்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு (6 ஏக்கர்)

ரெட் ஹில்ஸ் முதல் அருமண்டை வரை நீண்டுள்ளது
லித்தியம் தொழில் பூங்கா (200-300 ஏக்கர்)

கண்டிகை முதல் மீஞ்சூர் வரை
திடக்கழிவு மேலாண்மை ஆலை (60 – 70 ஏக்கர்)

English summary
Industrialists said the corridor, which will connect the 62 km Chennai outer ring road and its environs, will play a major role in urban development.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-is-going-to-change-to-another-level-areas-along-the-orr-road-are-going-to-grow-tremendousl-452288.html