சிவமொக்கா – சென்னை இடையே ரெயில் சேவை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

ரேணிகுன்டா வழியாக சிவமொக்கா – சென்னை இடையேயான ரெயில் சேவையை ராகவேந்திரா எம்.பி. தொடங்கி வைத்தார்.

சிவமொக்கா:

சிவமொக்கா – சென்னை இடையே ரெயில்

  சிவமொக்காவில் இருந்து திருப்பதி அருகே தெலுங்கானா மாநிலம் ரேணிகுன்டாவுக்கும், சென்னைக்கும் தனித்தனி ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. வாரத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த ரெயில்கள் இயங்கி வந்தன. பின்னர் கொரோனா காலத்தில் அந்த 2 ரெயில்களும் நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த 2 ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

  அதன்படி சிவமொக்காவில் இருந்து ரேணிகுண்டா வரை ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அதே ரெயில் சென்னை வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த ரெயிலின் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை…

  அதன்படி சிவமொக்காவில் இருந்து ரேணிகுன்டா-சென்னை வரை செல்லும் ரெயிலை நாடாளுமன்ற உறுப்பினர் ராகவேந்திரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிவமொக்காவில் இருந்து புறப்பட்டு செல்லும். மறுமார்க்கமாக திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ரேணிகுன்டா வழியாக சிவமொக்காவை வந்தடையும் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயண கவுடா, மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா, கலெக்டர் செல்வமணி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி வைஷாலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source: https://www.dailythanthi.com/Districts/Chennai/2022/04/19030815/Rail-service-between-Sivamokka-and-Chennai.vpf