‘மெட்ராஸ்’ நடிகை வாங்கிய சொகுசுக்கார்: விலை இத்தனை லட்சமா? – தமிழ் News – Telugu Cinema – IndiaGlitz

சென்னைச் செய்திகள்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தில் நடித்த நடிகை பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த காரின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

’மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் விஷால் நடித்த ‘கதகளி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகை கேதரின் தெரசா நடித்தார். கடைசியாக அவர் சித்தார்த்துடன் ’அருவம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது ’பிம்பிசாரா’ உள்ளிட்ட 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கேத்தரின் தெரசா அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் சொகுசு கார் வாங்கி இருப்பதாக புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

Kia EV6 என்ற மாடலை கொண்ட இந்த சொகுசு காரின் மதிப்பு 66 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதிய கார் வாங்கிய கேத்ரின் தெரசாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Source: https://www.indiaglitz.com/madras-actress-buy-new-luxury-car-photos-viral-tamilfont-news-315542