மெட்ரோவில் பறக்கும் சென்னை வாசிகள்.. வசூல் அமோகம்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனம்‌, சென்னையில்‌ உள்ள மக்களுக்கும்‌, மெட்ரோ ரயில்‌ பயணிகளுக்கும்‌ ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுகுறித்த அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 01.01.2022 முதல்‌ 31.05.2022 வரை மொத்தம்‌ 1,95,07,837 பயணிகள்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌. அதேபோல, 01.06.2022 முதல்‌ 30.06.2022 வரை மொத்தம்‌ 5,29,039 பயணிகள்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌.

01.07.2022 முதல்‌ 31.07.2022 வரை மொத்தம்‌ 53,17,659 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 01.08.2022 முதல்‌ 31.08.2022 வரை 56,06,231 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தம் 56.06 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.

அதிகபட்சமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி மட்டும் மொத்தம் 2,20,898 பயணிகள்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌.

ஜூலை மாதத்தை காட்டிலும்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ 3,48,572 பயணிகள்‌ அதிகமாக பயணித்துள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ மட்டும்‌ க்யுஆர்‌ குறியீடு (QR code) முறையைப்‌ பயன்படுத்தி 17,95,601 பயணிகள்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌. மேலும்‌, பயண அட்டை பயணச்சீட்டு முறையைப்‌ பயன்படுத்தி 34,42,151 பயணிகள்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌.

மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ.. 53 லட்சம் பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனம்‌ மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர்‌ குறியீடு பயணச்சீட்டு மற்றும்‌ பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும்‌ பயணிகளுக்கு 20% கட்டணத்‌ தள்ளுபடி வழங்கி வருகிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வளாகத்தையும் ரயில்களையும் சுத்தமாக வைத்திருப்பதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

Source: https://tamil.samayam.com/business/business-news/more-than-56-lakh-passengers-travelled-on-chennai-metro-trains-in-2022-august-month/articleshow/93922835.cms