மான்- குரங்கு ‘நண்பேன்டா’: சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அரிய காட்சி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

மெட்ராஸ் ஐஐடி கேம்பஸ்ஸில் ஒரு குரங்கு சிட்டாலை (புள்ளி மான்) வசதியாக பிடித்து சவாரி செய்யும் வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புள்ளி மான் தாவரங்களை கடந்து செல்வதை அந்த வீடியோவில் கவர்ந்துள்ளனர்.

வினோதமான மற்றும் அழகான இந்த விலங்கின் நட்பை, இந்திய தொழில்நுட்பக் கழக மெட்ராஸ் வளாகத்திற்குள் படம் பிடித்து சமூக ஊடகத்தில் பகிர்ந்ததால் பலர் இதயத்தை வென்றது.

@lonelyredcurl என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட வீடியோ, இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அருகில் உள்ள செடிகளை மேய்வதற்காக அந்த புள்ளி மான் நடந்து செல்வதையும், ​​ஒரு குட்டி குரங்கு அதன்மேல் சவாரி செய்வதையும் காட்டுகிறது.

மான் குனிந்து புல்லை உண்பதைக் காணலாம், அது மெதுவாக குரங்கை தாங்கிக் கொண்டு கட்டிடத்திற்கு நடுவே நகர்கிறது.

வெறும் 14 மணி நேரத்தில் 54,000 பார்வைகளைப் பெற்றுள்ள இந்த ட்வீட், இரண்டு வெவ்வேறு இனங்களுக்கிடையேயான விசித்திரமான மற்றும் வேடிக்கையான நட்பை மக்களுக்கு காட்டுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://tamil.indianexpress.com/lifestyle/viral-video-of-monkey-and-deer-from-iit-madras-524516/