சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு: மக்கள் கூடும் இடங்களில் எச்சரிக்கை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி, தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் பதினெட்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்க அதிகளவு மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம். அப்படி புரசைவாக்கம், தியாகராய நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதினாறு தற்காலிக பாதுகாப்பு கோபுரங்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பைனாகுலர்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமாக சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தியாகராய நகர் பகுதியில் ஆறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை பேஸ் ரெகக்னிசன் தொழில்நுட்பம் மூலமாக கண்காணிக்க தயார் படுத்தியுள்ளன. இதன் மூலமாக பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தால் உடனடியாக கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்படுகிறது.

தியாகராய நகர் பகுதியில் நான்கு இடங்களில் 11 தற்காலிக கட்டுப்பாடு அறைகள் அமைத்துள்ளன. இதில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1LzE4MDAwLXBvbGljZS1wcm90ZWN0aW9uLW9uLWFsbC1vdmVyLWNoZW5uYWktZm9yLXRoaXMtZGl3YWxpLTUyOTA1Ni_SAQA?oc=5