சென்னை போக்குவரத்து பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை போக்குவரத்து பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புகை மற்றும் மது அருந்திய நிலையில் பணிக்கு வரும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேருந்து பணிமனைக்குள் பணியாளர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDk0NjLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwOTQ2Mi9hbXA?oc=5