6 அடுக்கு பார்க்கிங், வி.ஐ.பி ஓய்வு அறைகள்… நவீன வசதிகளுடன் சென்னை ஏர்போர்ட் புதிய டெர்மினல் ரெடி – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Chennai Airport: வருகின்ற டிசம்பர் மாத இறுதியில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறக்கவுள்ளனர். புதிய முனையத்தை திறப்பதையடுத்து, மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களை  இனைத்து புதிய நவீன முனையம் அமைப்பதற்கு 2018ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த பணியை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இரண்டு கட்டங்களாக கட்டப்படும் இப்பணியில், முதலில் ஆறு-அடுக்கு ‘மல்டிலெவல் காா் பாா்க்கிங்’, நவீன வசதிகளுடன் நுழைவாயில், புறப்பாடு முனையம், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை, வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை அடங்கும். 

இதை தொடர்ந்து, முதல் கட்டப் பணி வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் மக்களுக்காக திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

திறப்பு விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கும் புதிய முனையத்தை த்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

புதிய முனையத்தின் இரண்டாம் கட்டப்பணி முடிவடைந்தவுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையத்தின் கட்டிடத்தை இடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

2024ஆம் ஆண்டு டிசம்பரில், சென்னை விமான நிலையத்தின் பயணிகளின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L25ldy10ZXJtaW5hbC1hdC1jaGVubmFpLW1lZW5hbWJha2thbS1haXJwb3J0LWJ5LXRoaXMtZGVjZW1iZXItNTQ1MTExL9IBAA?oc=5