Tamil Nadu Weather News: கனமழை எச்சரிக்கை: குறிப்பிட்ட மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்க தடை – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Tamil Nadu Weather News: தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலில் இருந்து, சென்னைக்கு தென்கிழக்கே 900 கிலோமீட்டர் தொலைவில் வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது இன்று (டிசம்பர் 7-ம் தேதி) மாலைக்குள் படிப்படியாக வலுவடைந்து ஒரு சூறாவளி புயலாக மாறி, டிசம்பர் 8-ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது.

இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வியாழன் அன்று 13 மாவட்டங்களுக்கும், வெள்ளிக்கிழமை 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZ2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L3RhbWlsLW5hZHUtd2VhdGhlci1uZXdzLWxpdmUtdXBkYXRlcy1vbi0wN3RoLWRlY2VtYmVyLTU1NDA1Ny_SAWxodHRwczovL3RhbWlsLmluZGlhbmV4cHJlc3MuY29tL3RhbWlsbmFkdS90YW1pbC1uYWR1LXdlYXRoZXItbmV3cy1saXZlLXVwZGF0ZXMtb24tMDd0aC1kZWNlbWJlci01NTQwNTcvbGl0ZS8?oc=5