மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்த்தநாரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் கோவில் மிகவும் பழமையானது என்பதனால் தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதுவரை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுத்த கோவில்கள், புராதன சின்னங்கள், கட்டிடங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்றும், சிதிலடம் அடைந்து உள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
பிரதமர் மோடி குறித்த BBC ஆவணப்படம் தமிழில் மொழி பெயர்ப்பு – திருமாவளவன் அதிரடி!
பத்து ஆண்டுகள் ஆகியும் சென்னை கன்னிமாரா நூலக சீரமைப்பு பணிகள் முடிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். உயர் நீதிமன்றம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் பல முறை நினைவூட்டப்பட்டும் எந்த கவனம் செலுத்தப்படவில்லை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், டூம்கள் இடிந்து விழுவதாக கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தொல்லியல் துறையில் சார்பில், போதுமான பணியாளர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiuQFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvbWFkcmFzLWhpZ2gtY291cnQtY29uZGVtbmVkLWNlbnRyYWwtZGVwYXJ0bWVudC1vZi1hcmNoZW9sb2d5LWZvci1ub3QtcHJvcGVybHktbWFpbnRhaW5pbmctdGhlLW1hZHJhcy1oaWdoLWNvdXJ0L2FydGljbGVzaG93Lzk3MzIyOTMyLmNtc9IBvQFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvbWFkcmFzLWhpZ2gtY291cnQtY29uZGVtbmVkLWNlbnRyYWwtZGVwYXJ0bWVudC1vZi1hcmNoZW9sb2d5LWZvci1ub3QtcHJvcGVybHktbWFpbnRhaW5pbmctdGhlLW1hZHJhcy1oaWdoLWNvdXJ0L2FtcF9hcnRpY2xlc2hvdy85NzMyMjkzMi5jbXM?oc=5