சேலம்-சென்னை எழும்பூா் ரயில் டிச.14 முதல் தினசரி இயக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சேலம்-சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிச.14 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது.

சேலம்-சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சேலம்-சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த டிச.2 ஆம் தேதி முதல் இரு மாா்க்கமாக வாரத்திற்கு 3 நாள்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

வண்டி எண் 22153 சென்னை எழும்பூா்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு காலை 6.10 மணிக்கு சேலம் சென்றடையும். வண்டி எண் 22154 சேலம்-சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில், சேலத்தில் இருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் இரவு 9.40 மணிக்குப் புறப்பட்டு, காலை 3.50 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இதனிடையே சென்னை எழும்பூா்-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் டிச.13 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது.

அதேபோல சேலம்-சென்னை எழும்பூா் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிச.14 ஆம் தேதி முதல் தினசரி இயக்கப்பட உள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/dec/07/the-salem-chennai-egmore-train-will-run-daily-from-december-14-3749781.html