Madras Samayal : மெட்ராஸ் சமையல் யூடியூப் சானலின் டாப் 10 சமையல் குறிப்பு வீடியோக்கள். – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

இன்று என்ன சமைக்கலாம் என யோசித்து யோசித்து அலுத்துப்போன பெண்களுக்கு விடை கொடுத்தது என்றால் அது யூடியூப் சானல்கள்தான். எதை வேண்டுமானாலும் சமைக்கலாம் என்பதை எளிமையாகக் காட்டும் யூடியூப் சேனல்கள் பெண்களுக்கு கிடைத்த வரம்.

அந்த வரிசையில் தமிழ்நாட்டுப் பெண்களின் சமையலறையில் முதலிடம் பிடிப்பது மெட்ராஸ் சமையல்தான். அமெரிக்காவில் வசித்து வரும் ஸ்டெஃபி என்பவரால் 2015 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனல் தமிழில் டாப் 10 சேனல்களில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் எதை சமைக்க வேண்டும் என்றாலும் இந்த யூடியூப் சேனல் சென்று பார்க்கலாம்.

அந்த வகையில் உங்களுக்காக மெட்ராஸ் சமையல் பக்கத்திலிருந்து டாப் 10 வீடியோக்களை உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்குப் பிடித்த உணவை சமைத்து வீட்டில் இருப்போரை அசத்துங்கள்.

கோடைகாலத்தில் பலாப்பழம் எளிதில் கிடைக்க கூடிய உணவு என்பதால் அதை வைத்து பாயாசம் எப்படி செய்யலாம் எனக் கற்றுக்கொடுக்கிறார். இது தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

[embedded content]

அசைவ உணவுப்பிரியர்களின் ஃபேவரெட் பட்டியலில் இறாலுக்கும் இடமுண்டு. அதுவும் இறால் தொக்கு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் நா ஊறும். அப்படி நாவூறும் சுவையில் மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி இறால் தொக்கு எப்படி செய்வது என கற்றுத்தருகிறார்.

[embedded content]

தொண்டைக்கு இதமான , மாலை நேரத்தை இன்பமாக்குவதில் டீக்கு அடுத்தபடியாக சூப் இருக்கும். குறிப்பாக சாலையோர அல்லது கடைகளில் விற்கப்படும் சூப் என்றாலே தனி சுவைதான். அதையும் அதே சுவையில் வீட்டிலேயே ஆரோக்கியமாக எப்படி செய்வது என கற்றுத்தருகிறார்.

[embedded content]

சிலருக்கு பிளெயின் டீயைக் காட்டிலும் மசாலா டீ மிகவும் பிடிக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் உடலுக்கும் ஆரோக்கியம் என்பதால் இதை பலரும் வீட்டிலேயே செய்து குடிக்க விரும்புகின்றனர். அவர்களுக்காக இந்த வீடியோ….

[embedded content]

கோடைகாலத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களில் இந்த பாதாம் மில்க் மற்றும் ரோஸ் மில்க் முக்கிய இடம் பிடிக்கும். கொரோனா சமயத்தில் வெளியே குடிக்க முடியாது என்பதால் வீட்டிலேயே செய்ய ஸ்டெஃபி கற்றுத்தரும் ரெசிபி…

[embedded content]

மிளகு குழம்பு சளி, இருமலுக்கு நல்லது. குறிப்பாக நோய் தொற்று காலத்தில் இதுபோன்ற குழம்பு வகைகள் பேருதவியாக இருக்கும். இதுவும் ஸ்டெஃபியின் டாப் லிஸ்டில் ஒன்று.

[embedded content]

பிரியாணியை விரும்பாதவர் யார்தான் இருப்பார்கள். அதுவும் கடை பிரியாணி என்றால் அலாதி பிரியம். ஆனால் அந்த சுவை இப்போது வீட்டிலேயே செய்யலாம் என்பது ஸ்டெஃபி போன்ற யூடியூப் சேனல்களாலேயே சாத்தியமானது. அந்தவகையில் இந்த தம் சிக்கன் பிரியாணி மெட்ராஸ் சமையலின் டாப் லிஸ்டில் இடம் பெறும்.

[embedded content]

இந்த லாக்டவுன் சாட் பிரியர்களுக்கு கடுமையான நெருக்கடி காலம்தான். இருப்பினும் இதுபோன்ற யூடியூப் சேனல்கள் இருக்கும்போது அதற்கு கவலையே இல்லை. ஸ்டெஃபி பானி பூரி வீட்டிலேயே செய்வது எப்படி என பக்குவமாக கற்றுத்தருகிறார்.

[embedded content]

இனிப்பு வகைகளில் கேசரி பலருக்கும் பிடிக்கும். ஆனால் அதை உதிரி உதிரியாக பக்குவமாக செய்வதில் பலருக்கும் சிக்கல் இருக்கிறது. அதற்காகவே எளிய டிப்ஸுகளுடன் சொல்லித்தருகிறார் ஸ்டெஃபி.

[embedded content]

மேலே இருக்கும் இந்த டாப் 10 சமையல் குறிப்புகள் உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்.

Source: https://tamil.news18.com/news/lifestyle/food-madras-samayal-steffi-top-10-cooking-recipe-videos-esr-462609.html