வயதானவர், ஏதோ பேசிவிட்டார்.. சென்னை யூடியூபர் மன்மோகன் மிஸ்ராவின் குடும்பத்தினர் கருத்து – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: வயது முதிர்ந்தவர் ஏதோ ஒரு கருத்தை சொல்லிவிட்டார், அவரை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக வீடியோ வெளியிட்ட சென்னை யூடியூபர் மன்மோகன் மிஸ்ராவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்த மாதவரம் வி.ஆர்.டி நகர் 2 ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா (62). இவர் தன்னை தானே சாமியார் என கூறிக் கொள்கிறார். மண்ணடியில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். எப்போதும் காவி உடையில் காட்சி அளிப்பார்.

இவர் உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூரில் பிறந்தவர். கடந்த 35 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் உத்தரப்பிரதேசத்தில் ஒரு மடத்தையும் நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடி, உ.பி. அரசை அவதூறாக பேசிய சாமியார்.. சென்னை வந்து கைது செய்த உ.பி. போலீஸ்!பிரதமர் மோடி, உ.பி. அரசை அவதூறாக பேசிய சாமியார்.. சென்னை வந்து கைது செய்த உ.பி. போலீஸ்!

மன்மோகன் மிஸ்ரா

கடந்த வாரம் மாதவரத்தில் இருந்த மன்மோகன் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியையும் உ.பி முதல்வர் யோகியையும் ஹிந்தியில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து உ.பி. பாஜகவினர் மிஸ்ரா மீது கொட்வாளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் உ.பி. போலீஸார் சென்னை வந்து தமிழக போலீஸார் உதவியுடன் மன்மோகன்
மிஸ்ராவை கைது செய்து ஜான்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சென்னை மிஸ்ரா

இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் மிஸ்ராவின் அக்கம்பக்கத்தினர் கூறுகையில், அவர் பாபா ராம்தேவின் தீவிர ஆதரவாளர். அவர் பதஞ்சலி பொருட்களுடன் தொடர்புடையவர். அதிகம் பேச மாட்டார். மிகவும் அமைதியானவர், ஆனால் இரவு நேரங்களில் வீடியோக்களை எடுக்கும் போது மட்டும் மேடை பேச்சாளர் போல் சப்தமாக பேசுவார் என்றார்.

3ஆவது அலை

இதுகுறித்து ஜான்பூர் போலீஸார் கூறுகையில் மிஸ்ரா தனது வீடியோவில் கொரோனா 3ஆவது அலை குறித்து தவறான தகவல்களை கொடுத்து மக்களை பீதியில் உறைய வைத்துள்ளார். ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் 3 பேராவது 3ஆவது அலைக்கு இறக்கிறார்கள் என உண்மைக்கு புறம்பான தகவலை மிஸ்ரா பரப்பியுள்ளார் என்றனர்.

தமிழில் சரளம்

மிஸ்ரா தமிழில் சரளமாக பேசினாலும் அவரது வீடியோக்கள் இந்தியில்தான் இருக்கும். இவர் சென்னையில் ஹிந்தி பேசும் தொழிலாளர்களுக்கு ஏஜென்டாக பணியாற்றியிருந்தார். திங்கள்கிழமை மாலை மிஸ்ராவின் மனைவி மாயா , அவரது மகன் மனோஜ் ஆகியோர் மிஸ்ராவை ஜாமீனில் எடுக்க உத்தரப்பிரதேசம் சென்றிருந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில் தேச பக்தி கொண்டவர் மிஸ்ரா.

அரசியல் அமைப்பு

மிஸ்ரா பிரதமர் மோடியின் ஆதரவாளராகவும் அவர் இருந்தார். ஆனால் அவர் எந்த வித அரசியல் அமைப்புகளுடனும் தொடர்பில் இல்லை. அண்மைக்காலமாக நிறைய மக்கள் தங்கள் கருத்துகளை உறக்க சொல்லி வருவது போல்தான் மிஸ்ராவும் தனது கருத்தை முன்வைத்தார். வயது முதிர்ந்தவர், எந்த வித தொந்தரவையும் ஏற்படுத்தாதவர். தங்கள் சொந்த கருத்தை சொல்லும் எத்தனை பேரைத்தான் நீங்கள் கைது செய்வீர்கள்.

கொரோனா பாதிப்பு

அவருக்கு ரத்த கொதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்கு இருதய கோளாறுகளும் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது உத்தரப்பிரதேசத்தில் அவருக்கு தெரிந்த நிறைய பேர் இறந்துவிட்டார்கள். அதனால் அந்த அச்சத்திலேயே மிஸ்ரா 3ஆவது அலை குறித்து பேசிவிட்டார். எனவே அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும். வயது முதிர்ந்தவர் ஏதோ பேசி விட்டார் என்ற அளவுக்குதான் இதை பார்க்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

English summary
“After all he was a old man”, says family of Chennai You tuber Manmohan Mishra arrested for video against Modi and Yogi Adithyanath.

Source: https://tamil.oneindia.com/news/chennai/after-all-a-old-man-says-family-of-chennai-you-tuber-manmohan-mishra-430158.html