` இளைஞர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட சகோதரர்!’ – சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த மோதல் – விகடன்

சென்னைச் செய்திகள்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், சிறுமியிடம் முதலில் விசாரித்தார். பின்னர், சிறுமியைக் கடத்திய பிரகாஷிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிறுமியை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் அழைத்துவந்த தகவலை பிரகாஷ் தெரிவித்தார். இதனால் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணையும் போலீஸார் இன்று பிடித்தனர். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது. representational imageமாதிரி புகைப்படம்இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீஸார் கூறுகையில், “சென்னையைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஏற்கெனவே பழக்கம் உள்ளது. அதனால் அந்தப் பெண் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக சிறுமியின் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டதற்கு ஏற்கெனவே 2 தடவை சிறுமி இரவு நேரத்தில் மாயமான தகவலை அவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தன்று வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து பிரகாஷ், அவரின் நண்பர் பைசல் ஆகியோர் சிறுமியை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே யதேச்சையாக சிறுமியை அவரின் அண்ணன் பார்த்தபோதுதான் இந்தத் தகவல் வெளியில் தெரியவந்துள்ளது” என்றனர். சிறுமியைக் கடத்திய சம்பவத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயிரம் விளக்குப் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
Source: https://www.vikatan.com/news/crime/2-persons-were-arrested-on-kidnapping-charge-in-chennai