கொரோனா மையங்களாக மாறுகிறது சென்னை கல்லூரிகள்! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா அறிகுறிகளுடன் கண்டறியப்படும் நபர்களை சுகாதாரத்துறை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகிறது. மேலும் தொடர்ந்து பாதிப்பிற்கு ஆளாபவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கு மருத்துவமனையில் பணிகள் நடந்து வருகிறது. “விரைவில் 30 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும்” என அங்கிருக்கும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை திரும்பிய நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக பூந்தமல்லியில் உள்ள சுகாதாரத் துறையின் பயிற்சி மையம் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டது.

இந்த சுகாதார பயிற்சி மையத்தில் சுமார் 41 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று நோய் நிபுணரான ரகுநாதன் நம்மிடம் கூறுகையில், “தாம்பரத்தில் புதிதாக, கொரோனா வைரஸ் கண்காணிப்பு மையம் தயாராகி வருகிறது. அதே வேளையில் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் விடுதிகள் உள்பட பல்வேறு பெரிய கட்டிடங்கள் கண்காணிப்பு மையங்களாக மாற்ற வாய்ப்புள்ளது” என்றார்.

கொரோனாவிற்கும் அஞ்சாத ’ஷாகீன் பாக்’- இப்படியொரு ஏற்பாடு செய்து போராடும் பெண்கள்!

இப்போதைய நேரத்தில் சுகாதாரத்துறை கொடுத்துள்ள அறிவுரைகள் படி, கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருபவர்களை 3 விதமாகக் கையாள்கிறோம். ஆரோக்கியமாகக் காணப்படும் நபர்கள் என்றால், அவர்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகள் வழங்கி, சம்பந்தப்பட்ட நபரை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்கள். குறிப்பாக அந்த நபர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் 18 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சுகாதாரத்துறை அறிவுரைகளின்படி வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், வெளிநாட்டிலிருந்து கொரோனா பாதிப்போடு நாடு திரும்புபவர்கள்தான் ஆபத்தானவர்களாக கண்டறியப்படுகிறார்கள். இதுபோன்ற நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். இதுவரை 2 பேர் இந்த முறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தேனி: நள்ளிரவிலும் கொரோனா சோதனை தீவிரம்!

குறிப்பாக இப்போதைய நேரத்தில் இந்த வைரஸ் தொற்று நாட்டில் பரவாமலிருக்கத் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போதைய நேரத்தில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மிகவும் குறைவான படுக்கைகளே கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-engg-college-may-change-as-coronavirus-quarantine-centres/articleshow/74686199.cms