நியூஸ் 18 செய்தி எதிரொலி – தூய்மை பணியாளர்களுக்கு சிறப்ப பேருந்து வசதி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
தூய்மை பணியாளர்கள்

  • Share this:
நியூஸ்18 செய்தி எதிரெலியாக துப்பரவு பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சிறப்பு பேருந்து வசதி செய்து கொடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்து வருகின்றது. கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Also Read : மதுபானத் தடையால் கேரளாவில் 9 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பைவிட அதிகம்இந்நிலையில், சென்னை முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய சுகாதார பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றும், ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அவர்கள் பணிக்கு வருவதற்கு வாகன வசதிகளும் இல்லாமல், கட்டிட கழிவு அகற்றும் வாகனத்தில் 10 முதல் 15 பணியாளர்கள் நெருக்கமாக நிற்கவைத்து அழைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து “நியூஸ் 18 தமிழ்நாடு” நேற்று  செய்தி வெளியிட்டு இருந்தது. இதன் எதிரெலியாக தூய்மை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வருவதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் பேருந்து வசதி ஏற்பாடு செய்துள்ளது.



சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 29, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-corporation-arrange-special-bus-on-cleaning-staff-vet-vjr-273117.html