சென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

UNIVERSITY OF MADRAS எனப்படும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனாலிட்டிக்கல் கெமிஸ்டரி துறையில் இருந்து JRF பணிக்கு அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் ஒரே ஒரு இடம் உள்ளது. JRF திட்டத்தின் தலைப்பின் பெயர் “MULTIFUNCTIONAL GRAPHENE – BIORESORBABLE NANO TRICALCIUM PHOSPHATE BASED HYDROGELS 3D SCAFFOLD FOR BONE RECONSTRUCTS ஆகும்.

இது முழுக்க முழுக்க தற்காலிகமானது. மூன்று வருட திட்ட காலம்.இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் அனாலிட்டிக்கல், இன்ஆர்கானிக், பிசிக்கல், ஆர்கானிக், ஜெனரல் கெமிஸ்டரி ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Also Read this:

  • டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை!
  • பி.இ முடித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!

விண்ணப்பதாரர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து அதனை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. T.M. Sridhar,
Assistant Professor and Head i/c,
Department of Analytical Chemistry,
University of Madras,
Guindy Campus, Chennai – 25

இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Source: https://tamil.samayam.com/jobs/other-jobs/university-of-madras-invites-application-for-jrf-post-recruitment-2020-check-vacancies-here/articleshow/75065155.cms