காண்டாக்ட் இல்லை.. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கேஸ்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த காரணம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1937 பேருக்கு மொத்தமாக இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.

imageதமிழகத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா.. இதுவரை 1937 பேர் பாதிப்பு.. சென்னையில் மோசமாகும் நிலை!

கடினம் ஆகியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளது. தமிழகத்தில் தினமும் ஏற்படும் கேஸ்களில் 90% கேஸ்கள் சென்னையில் இருந்துதான் ஏற்படுகிறது. தமிழகம் முழுக்க மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக சென்னையில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

என்ன காரணம்

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். அதில், சென்னையில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. தினமும் ஆயிரம் என்ற விகிதத்தில் சென்னையில் மட்டும் கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக சோதனை செய்யப்படுகிறது. இதுவும் கூட அதிக கேஸ்கள் வர காரணம் ஆகும்.

மக்கள் தொகை

சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்த்து மொத்தம் 1.5 கோடி பேர் வசிக்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இவ்வளவு பேர் வசிக்கவில்லை. இந்தியாவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் முக்கியமான நகரமாக சென்னை உள்ளது. இதனால் சென்னையில் அதிகமாக கேஸ்கள் இருக்கிறது. ஆனாலும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

மக்கள் நெருக்கம்

சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கண்டிப்பாக மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிக அளவில் கேஸ்கள் இருக்கும். ஆனாலும் சென்னையில் போக போக கேஸ்களை கட்டுப்படுத்துவோம், என்று விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லும் காரணம் மிக முக்கியமானது ஆகும். இந்தியாவில் இருக்கும் மெட்ரோ நகரங்கள் எல்லாம் கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை குறைவு

டெல்லி, ஹைதராபாத் போன்ற நகரங்கள் மிக மோசமாக கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை அந்த நகரங்களை விட மிக குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இப்படி கேஸ்கள் அதிகரிக்க காரணம் மக்கள் தொகை மற்றும் அதிக மக்கள் நெருக்கடிதான் காரணம் ஆகும். அதேபோல் சென்னையில் காண்டாக்ட் டிரேஸ் செய்யும் முறைகள் மிக மிக கடினமானது ஆகும்.

காண்டாக்ட் டிரேஸ் கடினம்

ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பது சென்னையில் கடினம் ஆகும். சென்னையில் நேற்று முதல் நாள் நாள் 13 கேஸ்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் 6 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 47 பேரில் 4 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை.

காண்டாக்ட் லெஸ் கேஸ்கள்

தமிழகத்தில் சென்னையில்தான் இப்படி அதிகமாக காண்டாக்ட் லெஸ் கேஸ்கள் அதிகம் வருகிறது. இதேபோல் அதிகமாக கொரோனா கேஸ்கள் வந்தால் அது ஸ்டேஜ் 3யை ஏற்படுத்தும். தமிழகத்தில் வேறு எங்கும் இந்த அளவில் அதிகமாக காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் வரவில்லை. குறைவான அளவே இப்படி காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் வருகிறது . இன்று மதுரையில் இரண்டு பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழர்களின் No.1 திருமண இணையத்தளத்தில் பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-what-is-the-main-reason-behind-the-increase-in-cases-in-chennai-383837.html