ஆம்பன் புயலின் தாக்கம்.. இரவு முழுக்க விடாமல் பெய்த மழை.. சென்னை முழுக்க வெளுத்து வாங்கியது! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆம்பன் புயல் காரணமாக இரவு முழுக்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது.

ஆம்பன் புயல் தற்போது நிமிடத்திற்கு நிமிடம் வலு அடைந்து கொண்டே செல்கிறது. இந்த புயல் மிக தீவிரமாக உருவெடுக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே செல்கிறது. மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது.

imageஅதி தீவிர “சூப்பர்” புயலாக மாறிய ஆம்பன்.. மிக மோசமான சேதத்தை உண்டாக்கும்.. வானிலை மையம் வார்னிங்

தமிழகத்தை தாக்காது

ஆனால் இந்த புயல் தமிழகத்தை தாக்காமல் விலகி சென்றுள்ளது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் இருந்து இந்த புயல் 650 கிமீ தூரத்தில் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது.இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும்.

சாரல் மழை பெய்தது

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மழைக்கு அருகே இருக்கும் மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. கோவை, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாரல் மழை பெய்தது. கொங்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதை தொடர்ச்சியாக இரவும் பெய்தது.

சென்னை மழை

இரவு முழுக்க சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் விடாமல் மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை விடாமல் பெய்தது. ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், கே.கே நகர், போரூர், பம்மல், வேளச்சேரி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நந்தம்பாக்கம், ஆவடி, மணலி, மடிப்பாக்கம், கனமழை பெய்தது. பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.

திடீர் வானிலை

சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. அக்கினி நட்சத்திரம் என்பதால் தினமும் 40-42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வந்தது. ஆனால் தற்போது வெப்பநிலையை தணிக்கும் வகையில் சென்னையில் மழை பெய்துள்ளது. இதனால் சென்னையில் கடுமையான கோடையால் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் புத்துணர்ச்சி அடைந்து உள்ளனர்.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/amphan-storm-heavy-rain-lashes-many-parts-of-chennai-yesterday-night-385916.html