சென்னை – சேலம் இடையே விமான போக்குவரத்து: இன்று தொடக்கம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை – சேலம் இடையேயான விமானப் போக்குவரத்து, புதன்கிழமை தொடங்குகிறது.

உள்நாட்டு விமான சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து சேலம்-சென்னை இடையே புதன்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. 2 மாதத்துக்கு பிறகு விமான சேவை தொடங்க உள்ள நிலையில், தற்போது விமானம் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானம் வரும். பின்னா் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் புறப்பட்டுச் செல்லும். தற்போது, மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி, சென்னையில் இருந்து காலை 7.25 மணிக்கு விமானம் புறப்பட்டு, 8.25 மணிக்கு சேலம் சென்றடையும். பின்னா் காலை 8.55 மணிக்கு அந்த விமானம் சேலத்தில் இருந்து புறப்பட்டு, 9.50 மணிக்கு சென்னையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/may/27/air-traffic-between-chennai-and-salem-beginning-today-3419903.html