இது 25 ஆண்டுகால கனவு- உத்தரவிட்ட ஸ்டாலின்.. மாஸ் காட்டும் ககன்தீப் சிங் பேடி.. ஸ்மார்டோ ஸ்மார்ட்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளை சுத்தம் செய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் உள்ள கொசுக்களை ட்ரோன் மூலம் அழிக்கும் பணிகளுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

சென்னை மேயராக இருந்த போது 25 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையை அழகுப்படுத்தும் விதமாக சிங்கார சென்னை என்ற திட்டத்தை கொண்டு வந்தார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த திட்டத்தின் மூலம் மேம்பாலங்கள், சிறிய பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், கடற்கரைகளை அழகுப்படுத்துதல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை செய்ய திட்டமிடப்பட்டன.

கொரோனா பரவல்.. மத்திய கிழக்கு நாடுகளில் வேலையிழந்து.. நாடு திரும்பிய 10.45 லட்சம் இந்தியர்கள்கொரோனா பரவல்.. மத்திய கிழக்கு நாடுகளில் வேலையிழந்து.. நாடு திரும்பிய 10.45 லட்சம் இந்தியர்கள்

திட்டம்

இதையடுத்து ஆட்சி மாற்றம் வந்தவுடன் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 2006 -ஆம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்த போது இந்த திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து மீண்டும் ஆட்சி மாற்றம்.. இப்படியே போனது இந்த திட்டம்.

முதல்வர்

இதை சுருக்கமாக ஸ்டாலினின் கனவு திட்டம் என்றே சொல்லலாம். எனவே தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை அழைத்து சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நீர் தெளிவு

இதையடுத்து ககன்தீப் சிங் பேடி தனது மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சூப்பர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் மாஸ் கிளீனிங் எனப்படும் நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளாகும். தேங்கியிருக்கும் கால்வாய்களில் உள்ள குப்பைக் கூளங்களை அகற்றி நீர் தெளிவாக ஓடும்படி செய்யும் திட்டத்தை கையிலெடுத்துள்ளார்.

சாக்கடை

அடுத்தது கால்வாய்களில் தேங்கியுள்ள சாக்கடை நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நிறைய பல நோய்களை உருவாக்கி வருகிறது. இதனால் கொசு லார்வாக்களை அழிக்க டிரோனில் பூச்சி மருந்தை நிரப்பி இதை கால்வாயில் இயக்க வைத்து கொசுக்களை ஒழிக்கிறார்கள்.

உயிர் கொடுக்கும் திட்டம்

இது சிங்கார சென்னை திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் திட்டம் மட்டுமல்ல. கொசுக்களால் ஏற்படும் நோய்களை ஒழிக்கவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் மழை நீர் கால்வாய் வழியாக தங்கு தடையின்றி செல்லவும் இந்த திட்டம் பயனளிக்கும்.

எந்த துறை

ககன்தீப் சிங் பேடி எந்தத் துறையில் பொறுப்பேற்றாலும் அந்த துறையில் நிச்சயம் சாதிப்பார். பேரிடர் மீட்புத் துறையில் இருந்த போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூரில் மீட்பு பணிகளை மேற்கொண்டார். அது போல் தமிழக வேளாண்துறை செயலாளராக இருந்த ககன்தீப், வெட்டுக்கிளி தாக்குதலையும் திறமையாக கையாண்டார்.

ஐடியா

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெட்டுக்கிளிகள் இருந்த போதிலும் அது சாதாரண வெட்டுக்கிளிகள்தான். வட மாநிலங்களில் வேளாண் பயிர்களை நாசம் செய்யும் லோகஸ்ட் ரக வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழையவில்லை. அவ்வாறு நுழைந்தால் அதை அழிக்க மாலத்தியான் மருந்தை ட்ரோனில் நிரப்பி வான்வெளியாக தெளிக்கலாம் என ஐடியா கொடுத்தவரும் இவர்தான்.

English summary
Chennai Corporation Commissioner Gagandeep Singh Bedi is initiating Singara Chennai 2.o project.

Source: https://tamil.oneindia.com/news/chennai/gagandeep-singh-bedi-is-initiating-singara-chennai-2-o-project-425995.html