சென்னை: இவ்வளவு சொல்லியும்..இத்தனை வண்டிகள் பறிமுதல்! | chennai Lockdown : Police check vehicle and 948 vehicle seezd for violation – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையில் இன்று முழு ஊரடங்கை மீறியதாக 948 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பை கட்டுப்படுத்த கடும் விதிமுறைகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் 12 நாட்களில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. 

மேலும், சென்னையில் நகர் முழுவதும் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 18000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்டுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று முழு ஊரடங்கால் சாலைகளில் வாகனங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது. நகரின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை கடுமையாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில பகுதிகளில் ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இன்று மட்டும் முழு ஊரடங்கை மீறியதாக 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளை மதிக்காமல் வெளியே நடமாடிய 3577 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  

image

ஊரடங்கு தொடங்கப்பட்ட நேற்று முன்தினத்தில் இருந்து இதுவரை, 10,655 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளன என்றும், 10,604 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சுட்காட்டியுள்ளார். மேலும், சென்னையில் இதுவரை காவல்துறையை சேர்ந்த 870 பேருக்கு  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் 333 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ns7.tv/index.php/ta/tamil-news/tamilnadu/21/6/2020/chennai-lockdown-police-check-vehicle-and-948-vehicle-seezd