ஆராய்ச்சிப் படிப்புக்கு ஓர் அரிய வாய்ப்பு! – தினமணி

சென்னைச் செய்திகள்

மாதம் தோறும் ரூ.60000 உதவித் தொகையுடன் கல்வி கற்கும் மெகா வாய்ப்பை வழங்குகிறது மெட்ராஸ் ஐஐடி. 

Robert Bosch Centre for Data Science and Artificial Intelligence (RBCDSAI) இந்த வாய்ப்பை வழங்குகிறது. டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Data Science and Artificial Intelligence) பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் (research internships) இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். 

இது இரண்டு ஆண்டு கால post-Baccalaureate fellowship programme ஆகும். இதில் பங்கேற்று ஆராய்ச்சிப்படிப்பை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40000 முதல் ரூ.60000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.  

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேர விரும்புபவர்கள் கடந்த 2 ஆண்டிற்குள் தங்களது இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது சுயவிவரக்குறிப்புடன் 300 முதல் 500 வார்த்தைகள் என்ற அளவில் ஆராய்ச்சி தொடர்பாக முன்குறிப்புகள் தயார் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 

நிகழாண்டில் இந்த ஆராய்ச்சிப் படிப்பிற்கு 15 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 

இதற்காக விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு மாதத்திலும் 20 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் பெறப்பட்ட மாத்திற்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நேர்முகத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள் network analytics, financial analytics, reinforcement learning, NLP etc., உள்ளிட்ட தலைப்புகளை விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யலாம். 

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேர விரும்புபவர்கள் R, Python, and MATLAB போன்ற உயர்நிலை மொழிகளைக் கையாளத் தெரிந்திருப்பது நல்லது. 

விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர் பெயர், மின்அஞ்சல் முகவரி, பட்டப்படிப்பு விவரங்கள் மற்றும் கல்வி பயின்ற பல்கலைக்கழகங்கள் விவரம், துறைரீதியாக பெற்ற தரவரிசை, எதற்காக இந்த ஆராய்ச்சிப் படிப்பை படிக்க விரும்புகிறீர்கள்? என்பன போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். 

இந்த ஃபெலோசிப்பில் 33 faculty உள்ள நிலையில் நீங்கள் தேர்வு செய்யும் 3 பேர்களின் விவரங்களையும் குறிப்பிடுவதுடன், எந்தப் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பன போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

Areas of Research

• Deep Learning
• Network Analytics
• Natural Language Processing
• Theoretical Machine Learning
• Reinforcement Learning and Multi-arm Bandits
• System Architecture for Data Science and AI
• Ethics, Fairness and Explainability in AI
• Systems Biology and Healthcare
• Smart cities and Transportation
• Financial Analytics

தொடர்புக்கு…

[email protected]

ஐஐடி-இல் படித்தவர் என்றாலே சமூகத்தில் பெரிய மரியாதை உண்டு. இந்த நிலையில், புதிய சிந்தனைகளுடன் எதிர்காலத் திட்டமிடலுடன் கடினமாக உழைக்கும் இளைஞர்கள்  ஐஐடி மெட்ராஸ்  வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு உயரலாம்.

Source: https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2020/jun/23/what-a-rare-opportunity-to-study-research-3429076.html