அடுத்த 25 நாட்கள்.. கொரோனா உச்சத்தை கடக்கும் தலைநகர்.. சென்னைக்கு விரைவில் வரப்போகும் நல்ல செய்தி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சென்னை, தற்போது அந்த பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வர தொடங்கி உள்ளது.

image 10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 4985 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 175678 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் சென்னையில் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று 1298 கொரோனா கேஸ்கள் வந்தது. சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 87235 ஆக உயர்ந்துள்ளது.

imageஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.

சென்னை நிலை

சென்னையில் தற்போது 87235 கொரோனா கேஸ்கள் இருந்தாலும் கூட தற்போது 15127 பேர் சென்னையில் இப்போது ஆக்டிவ் கேஸ்களாக இருக்கிறார்கள். ஆக்டிவ் கேஸ்கள் என்றால், வீட்டில் இருந்து சிகிச்சை பெறும் நபர்களையும் சேர்த்துதான். இதுவரை சென்னையில் 70651 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நாளுக்கு நாள் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

என்ன சொன்னார்

இந்த நிலையில் தமிழக அமைச்சர் கே பாண்டியராஜன் இதுகுறித்து தெரிவிக்கவில்லை. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சென்னையில் கேஸ்கள் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மிக விரைவில் பச்சை மண்டலமாக மாறும். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு இல்லை. தேவையான அளவு கட்டுப்பாட்டு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன சொல்கிறார்கள்

மருத்துவ வல்லுநர்கள் பலரும் இதை உறுதிப்படுத்துகிறார்கள். சென்னை விரைவில் கொரோனா இல்லாதா மாவட்டமாக மாறும் என்று கூறுகிறார்கள். சென்னையில் தினசரி கேஸ்கள் குறைந்துவிட்டது. இதன் அர்த்தம், சென்னை தனது “பீக்கை” கடந்துவிட்டதுதான் என்று கூறுகிறார்கள். சென்னையில் புதிதாக எங்கும் கிளஸ்டர் உருவாகவில்லை, அதனால் புதிதாக கேஸ்கள் பெரிய அளவில் பரவவில்லை என்று கூறியுள்ளனர்.

எத்தனை நாட்கள்

சென்னையில் சராசரியாக தினமும் 1200 கேஸ்கள் தற்போது வருகிறது. சென்னையில் தினமும் இன்னொரு பக்கம் சராசரியாக 1500 பேர் குணமடைகிறார்கள். இதனால் மொத்தமாக சென்னையில் கேஸ்கள் 5000க்கும் கீழே செல்ல 25 நாட்கள் ஆகும் என்கிறார்கள். ஆம் சென்னையில் அடுத்த மாத இறுதியில் எப்படியும் மொத்த கொரோனா ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் செல்லும் என்று கணக்கிட்டு உள்ளனர்.

உடனே மாறாது

சென்னையில் உடனே கேஸ்கள் எல்லாம் மாயமாகி, பூஜ்ய கேஸ்கள் வராது. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக 5000 ஆக்டிவ் கேஸ்கள் வரை செல்ல வாய்ப்புள்ளது என்று உறுதியாக கூறுகிறது. சென்னை தனது உச்சத்தை கடந்துவிட்டது என்று கூறுகிறார்கள். உடனே எந்த மேஜிக்கையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் கண்டிப்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என்கிறார்கள்.

குறையும் சதவிகிதம்

சென்னையில் பாதிப்பு சதவிகிதம் குறைந்துள்ளது. சென்னையில் முன்பு 100 பேர் சோதனை செய்யப்பட்டால் பாதிப்பு சதவிகிதம் 32% ஆக இருந்தது. தற்போது 25% குறைந்து, நேற்று 8.9% சதவிகிதமாக குறைந்து உள்ளது. அதாவது சென்னையில் 100 பேர் சோதனை செய்யப்பட்டால் 9 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது – IMA பரபரப்பு தகவல்

புதிய கிளஸ்டர் இல்லை

அதோடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் அளித்த பேட்டியில், சென்னையில் புதிய கிளஸ்டர் எதுவும் இல்லை. அதோடு சென்னையில் லாக்டவுன் திறக்கப்பட்ட பின்பும் கூட புதிதாக கேஸ்கள் அதிகம் வரவில்லை. எங்கும் பெரிய அளவில் கொரோனா வெடிப்பு இல்லை, என்று கூறியுள்ளார். இதனால் சென்னையில் இன்னும் இரண்டு மாதங்களில் மொத்தமாக பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி – இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-chennai-crossing-its-peak-people-may-expect-some-good-news-soon-391962.html