`சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஆடியோ விவகாரம்!’ – எஃப்.ஐ.ஆரை ரத்து செய்த நீதிமன்றம் – Vikatan

சென்னைச் செய்திகள்

இதுகுறித்து வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் கூறுகையில், “உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் முகாந்திரமும் இல்லை. மேலும், அந்த ஆடியோவில் பேசும் மாணவியும் நடவடிக்கை வேண்டாம் என்று கூறிவிட்டார். தனிப்பட்ட இருவர் பேசிக்கொள்ளும் ஆடியோ பெண்களுக்கு எதிரான குற்றமாகக் கருத முடியாது. அதனால் எஃப்.ஐஆரை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

இதுகுறித்து உதவி இன்ஜினீயர் கமலகண்ணனிடம் கேட்டதற்கு, “என் மீது சுமத்தப்பட்ட புகாரில் உண்மையில்லை என்பதை நிரூபிக்க சிறிது காலம் தேவைப்பட்டது. இந்த ஆடியோ எனக்கு எதிராகத் திசைதிருப்ப சிலர் முயற்சி செய்தார்கள். புகாரே கொடுக்காமல் அவசர அவசரமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ரத்து செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது” என்றார்.

வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர்கள் கூறுகையில், “கொரோனா காலகட்டத்தில் எங்களின் உயிரைப் பணயம் வைத்து பணி செய்துகொண்டிருக்கிறோம். அதில் ஆயிரத்தெட்டு அரசியல் பிரச்னைகள் இருந்தபோதிலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்து கொரோனா பாதிப்பை இன்று சென்னையில் குறைத்துள்ளோம். ஆனால், கமலகண்ணன் ஆடியோ வெளியானதும் அவரை அவசரப்பட்டு பணியிடை நீக்கம் செய்துவிட்டார்கள். சம்பந்தப்பட்ட கமலகண்ணனிடம் விளக்கம் கேட்டபிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைப் போல போலீஸாரும் இந்தச் சம்பவத்தில் அவசரப்பட்டுவிட்டார்கள். இதற்குப் பின்னணியில் சிலரின் சதி செயல் உள்ளது” என்றனர்.

இதற்கிடையில் உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.vikatan.com/news/crime/chennai-corporation-asst-engineer-audio-leaks-issue