சென்னையில் மீண்டும்…கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு… தேவை பரிசோதனை!! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சத்தை கொரோனா பாசிடிவ் விகிதம் காட்டுகிறது. அதாவது சென்னையில் கொரோனா பரிசோதனை பாசிடிவ் விகிதம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தளவில் இருக்கும்போது, கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளன.

டிஆர்பி என்று ஆங்கிலத்தில் கூறப்படும் அதாவது ‘டெஸ்ட் பாசிடிவ் ரேட்’ என்பது, பரிசோதனைக்கு நோய் அறிகுறி இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பது, அதை ஆய்வுக்கு உட்படுத்தி கொரோனா இருக்கிறதா இல்லையா என்று அறிவது. இந்த வகையில் சென்னையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக அதாவது ‘டெஸ்ட் பாசிடிவ் ரேட்’ 10 சதவீதத்தை கடக்கும்போது, பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை பரிசோதிக்கும் விகிதமும் 7 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 8-12 தேதிகளில் 7 சதவீதமாக இருந்த பரிசோதனை ஆகஸ்ட் 22ஆம் தேதி 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, 14,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே ஆக்ஸ்ட் 21 ஆம் தேதி 12,982 ஆக குறைந்துள்ளது. இந்த சதவீதங்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையில் கொரோனா பாசிடிவ் விகிதம் அதிகரித்து வருவது உறுதியாகிறது. சென்னைக்கு இ பாஸ் கேட்பவர்கள் அனைவருக்கும் வழங்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதால், கொரோனா தொற்று பாசிடிவ் விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பெரிய அளவில் பரவி வருகிறது என்பதை இது காட்டுகிறது.

imageதமிழகத்திலும் இ பாஸ் முறை ரத்தாகிறது? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

முன்பு சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று காணப்பட்டது. தற்போது மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வோருக்கும் தொற்று காணப்படுகிறது. சென்னையில் மட்டும் நேற்றுடன் 1,25,389 பேருக்கு கொரோன தொற்று உள்ளது. 70,127 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-coronavirus-update-test-positivity-rate-increases-amid-easing-the-travel-norms-395472.html