24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் – சென்னை மாநகராட்சி உத்தரவு – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

  • Share this:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தின் அனுமதி பெற்ற தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 அரசு, 31 தனியார் என 44 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இம்மையங்களில் பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், முழு முகவரி, வயது, பாலினம், தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் பரிசோதனை மையங்கள் மாநகராட்சிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தொற்று பரிசோதனைக்குப் பிறகு துல்லியமான முடிவை 24 மணிநேரத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அதேபோல் முடிவுகளை ICMR இணையதளத்தில் 24 மணி நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்கள் சென்னை மாவட்ட கணக்கில் பதிவிடப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். தொற்று பாதித்தவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


First published: August 26, 2020

Source: https://tamil.news18.com/news/coronavirus-latest-news/corona-test-results-within-24-hours-chennai-corporation-riz-tami-338361.html