சென்னையில் வெளுத்து வாங்கும் மழை; பொது மக்கள் ஹேப்பி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மேலும், சென்னை, திருவள்ளூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும், தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 26, 27 ஆகிய தேதிகளில் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

ஓணம் பண்டிகை: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

இந்த நிலையில், சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு குளிச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை காலம் நல்ல மழைப்பொழிவை அளித்து வருவதால், தமிழகம் முழுவதும் பரவலாக அதிக மழை பெய்திருந்தாலும், சென்னையில் ஏமாற்றம் அளித்துள்ளது. சராசரியை விட குறைவான அளவே மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/heavy-rain-lashes-in-several-parts-of-chennai/articleshow/77788329.cms