சென்னை ரிட்டர்ன்ஸ்.. மீண்டும் பிஸியாகும் சிட்டி.. நிரம்ப தொடங்கும் வீடுகள்.. ஹவுஸ் ஓனர்கள் ஹேப்பி! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஹவுஸ் ஓனர்கள் எல்லாம் சென்னையில் செம குஷியில் இருக்கிறார்கள்.. நல்லவேளை, டூலெட் நகரமாக மாறவிருந்த சென்னை, இப்போது இயல்பு நிலைக்கு மாறி வருகிறது.

ஒருகட்டத்தில் சென்னையை காப்பாற்றவே முடியாது என்ற நிலைமைக்கு தொற்று பரவிவிட்டது… சென்னையில் கொரோனா உச்சம் என்றதுமே மொத்த தமிழ்நாடும் சோகத்துக்கு சென்றது.. தங்கள் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகம் என்றாலும், சென்னையில் அதிக தொற்று என்பதை மட்டும் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை.

இதற்கு காரணம், தமிழ்நாட்டின் பெரும்பான்மையே சென்னைதான்.. எல்லா மாவட்டத்தை சேர்ந்தவர்களும் தங்கி படிப்பதும், வேலை பார்ப்பதும், குடியேறி உள்ளதும் சென்னையில்தான்!

அதனால், கொரோனா அச்சத்தினால், ஏராளமானோர் வாடகை கொடுக்க முடியாத சூழலும் ஏற்பட்டது.. அப்படி வாடகை தர முடியாத ஏராளமானோர், வீடுகளை காலி செய்து கொண்டு புறநகர் பகுதிகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்ல தொடங்கினர்.. இதனால், பெருமபாலான வீடுகளில் டூலெட் போர்டுகள் தொங்கி கொண்டிருந்தன.

அதேபோல, ஹவுஸ் ஓனர்களாலும், குடியிருப்போர்களிடம் கறாராக வாடகையை கேட்க முடியவில்லை… எத்தனையோ பேர், இந்த வாடகையை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்றாலும், ஊரைவிட்டு கிளம்பி செல்பவர்களை தடுக்க முடியவில்லை.. இன்னும் சில இடங்களில் வாடகை கேட்டதால், அரிவாளை எடுத்து ஹவுஸ் ஓனரை ஓட ஓட விரட்டி கொன்ற சம்பவமும் அரங்கேறியது.

imageபென்னி குவிக் கல்லறை சேதப்படுத்தப்பட்ட விவகாரம்… இங்கிலாந்து அரசிடம் தமிழக அரசு பேச வேண்டும் -வைகோ

இந்த லாக்டவுன் இப்படி நிறைய விஷயங்களை ஒவ்வொரு நாளும் நமக்கு கற்று தந்தே வந்தது.. இப்போது, முதல்வர் தளர்வுகளை அறிவித்துள்ளர்.. இ-பாஸ் ரத்து செய்துவிட்டார்.. அதனால், யாரெல்லாம் சென்னையை விட்டு சென்றார்களோ, மறுபடியும் எல்லாரும் சென்னைக்கே கிளம்பி வர தொடங்கிவிட்டனர்.. அவர்களது வருகையால் ஹவுஸ் ஓனர்கள் செம ஜாலியாகி உள்ளனர்.

டூலெட் போர்டுகளை மெல்ல மெல்ல அகற்றி வருகின்றனர்.. இதனால் அவர்கள் பொழப்பும் இனி பிரகாசமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.. அன்று கண்ணீருடன் அனைவரையும் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வந்த சென்னை, இப்போது இருகரம் நீட்டி அனைவரையும் வரவேற்று வருவதால், மீண்டும் பழைய பிஸிக்குள் மாநகரம் நுழைந்துள்ளது!

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/epass-cancelled-in-tamil-nadu-people-returning-to-chennai-and-vacant-houses-are-filling-up-slowly-396214.html