ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் மூவர் கைது – தினமணி

சென்னைச் செய்திகள்

ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை: ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய மூவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சனிக்கிழமையன்று துபையிலிருந்து இரண்டு விமானங்களில் சென்னை வந்த பயணிகளை சோதனை செய்த போது முஹமது முஸ்தாபா மீராசா மரைக்காயர், சஹுபர் அலி அய்ஞ்சை மற்றும் ஷேக் அப்துல்லா ஹபீப் அப்துல்லா ஆகிய மூவரது நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. அவர்களை விசாரணை செய்த போது ஆசனவாயில் தங்கத்தை பசை வடிவில் சிறு மூட்டைகளில் மறைத்து வைத்துள்ளதையும், சில தங்க கட்டிகளை தங்களது உடையில் மறைத்து வைத்துள்ளதையும் ஒப்புக் கொண்டனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் மரைக்காயர் மற்றும் அய்ஞ்சை ஆகிய இருவரிடமிருந்தும் தலா இரண்டு மூட்டைகளும்,             

அப்துல்லாவிடம் இருந்து மூன்று மூட்டைகளும் கைப்பற்றபட்டன. அத்துடன் உடைகளில் மறைத்து வைத்திருந்த ஐந்து சிறு தங்கத் துண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு 1.62 கிலோகிராம் மற்றும் அதன் சந்தை மதிப்பு ரூ.83.7 லட்சமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: https://www.dinamani.com/tamilnadu/2020/sep/27/three-smuggling-gold-in-rectums-nabbed-at-chennai-airport-3473665.html