குறையும் கொரோனா பாதிப்பு: சென்னையில் 4 தெருக்களுக்கு மட்டுமே ‘சீல்’ – சென்னை மாநகராட்சி தகவல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னையில் 4 தெருக்களுக்கு மட்டுமே சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால், மறுபடியும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னையில் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் தற்போது 4 இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்த வகையில் மணலி மண்டலத்தில் 3 தெருக்களும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஒரு தெருவும் என 4 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/02152600/Decreased-corona-exposure-Only-4-streets-in-Chennai.vpf