சென்னை சி.எல்.ஆர்.ஐ வளாகத்தில் மேலும் ஐந்து மான்கள் இறப்பு! – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

Five more Deers found dead in Chennai CLRI Campus: கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மான்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் ஐ.ஐ.டி.மெட்ராஸுக்கு எதிரே உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (The Central Leather Research Institute – CLRI) வளாகத்தில் குறைந்தது ஐந்து புள்ளி மான்கள் இறந்துள்ளன என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இறந்த ஐந்து மான்களில், இரண்டு மான்கள் நாய் கடித்ததாலும், ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டதாலும், ஒன்று தற்செயலாகக் கழிவுநீர் குழியில் விழுந்ததாலும் உயிரிழந்துள்ளன. மேலும் ஒரு மானின் சிதைந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” எனக் கடந்த செவ்வாய் கிழமையன்று சிறப்பு அரசாங்க அதிகாரி எஸ்.வி.விஜய் பிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சென்னையிலுள்ள ராஜ் பவன், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) மற்றும் சி.எல்.ஆர்.ஐ உள்ளிட்ட இடங்களைச் சுற்றி மான்களை விஞ்ஞான முறையைப் பின்பற்றாமல் இடம்பெயர்க்கப்பட்டுள்ளதாகப் பொதுநல மனு ஒன்று இருக்கிறது. ஆனால் இதனை எதிர்த்து, சென்னையின் மனித ஆதிக்கம் நிறைந்த இடங்களில் சுற்றித் திரியும் மான்களைப் பிடித்து அதற்குப் பொருத்தமான வாழ்விடங்களுக்கு இடமாற்றம் செய்ய ஸ்டாண்டர்ட் ஆப்பரேட்டிங் நடைமுறை (எஸ்ஓபி) பின்பற்றப்பட்டுள்ளது என்று வனத்துறை கூறுகிறது. மேலும், ஐ.ஐ.டி-எம் வளாகம் மற்றும் அதைச் சுற்றியும் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்றும், கண்டிப்பான அறிவுரைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும் பிளாஸ்டிக் தடையை அங்குச் சீராக அமல்படுத்தப்படவில்லை என்றும் வனத்துறை கூறியது.

இதற்கு, ஐ.ஐ.டி-எம் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் விளைவாக, அங்குள்ள மான்கள் அதையே உட்கொண்டு இறந்து கொண்டிருக்கின்றன. வளாகத்திற்குள் ஏராளமான மோசமான நாய்கள் இருந்தபோதிலும், நிர்வாகம் இந்த விவகாரத்தில் கண்மூடித்தனமாக உள்ளது என்று அரசாங்க அதிகாரி கூறுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவதால் சி.எல்.ஆர்.ஐ.யில் அவர்களின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதால் மான்களை இடமாற்றம் செய்வது அவசியம் என்று துறை சமர்ப்பித்தது. மேலும், 15 மான்கள் இன்னும் பிடிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும், நிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் சிறிது நேரம் கோரியதாகவும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

இந்தப் புகார்களைப் பதிவுசெய்து, நீதிபதி எம்.சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/five-more-deers-died-in-chennai-clri-campus-tamilnadu-forest-tamil-news-230308/