திடீரென சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. என்ன காரணம்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: நிவர் புயல் ஓய்ந்த நிலையில் வெள்ளநீர் வடிய சில நாட்களும் என்பதால் சென்னை மக்கள் பலர் சொந்த ஊருக்கு படை எடுக்கிறார்கள், நேற்று மாலை குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பலரும் முண்டியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிவர் புயல் காரணமாக கிட்டத்தட்ட 3 நாளில் 60 செமீக்கு மேல் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை முழுவதும் கிடைக்க வேண்டிய மழையில் பெரும் பகுதி கடந்த சில நாளில் சென்னையில் பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது.

imageநிவர் புயலால் நிலைகுலைந்த மாவட்டங்கள்.. 10 லட்சம் பேர் பாதிப்பு

புறநகர்

நிவர் புயல் கரையை கடந்த நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை தாம்பரத்தில் 31 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் 27 செமீ மழை பெய்துள்ளது. கனமழையால் தாம்பரம், முடிச்சூர், உள்பட செனனையின் புறநகர் பகுதிகளில் கடும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. வெள்ளநீர் மெதுவாக வடிந்து வருவதால் கடும் அவதிப்பட்டு வருகிறார்ர்கள்.

மக்கள் அவதி

வேளச்சேரி, தரமணி, வியாசர்பாடி, ஆர்கே நகர், தண்டையார்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும், அடையாறு கரையோர பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீரில் வீடுகள் தத்தளிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சொந்த ஊர்

இந்நிலையில் நேற்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று பிற்பகலுக்கு பிறகு சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு படை எடுத்தனர். திடீரென இரண்டு நாள் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த சென்னைவாசிகள் பலர் நேற்று கோயம்பேட்டில் குவிந்தனர். குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் பேருந்துகளில் போட்டிபோட்டு ஏறி சொந்த ஊர் சென்றனர். வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகு பலர் சொந்த ஊருக்கு வர திட்டமிட்டுள்ளனர்.

மக்கள் அச்சம்

இதனிடையே புரெவி புயலுக்கான காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்ககடலில் வரும் 29ம் தேதி உருவாகிறது. அந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. பொதுவாக தெற்கு வங்ககடலில் புயல் உருவானால் தமிழகத்திற்கு அதிக மழை கிடைக்கும் என்பதால், இந்த புயலால் சென்னைக்கும் அதிக மழை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிவர் ஓய்ந்த நிலையில் அடுத்தடுத்து மழை பெய்ய தொடங்கினால் மக்கள் அவதிக்குள்ளாக நேரிடும் அபாயமும் உள்ளது.

– பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-people-leaving-for-their-hometown-crowded-on-buses-404282.html