மும்பை-ஐதராபாத்தில் இருந்து இன்று மேலும் 2 லட்சம் தடுப்பூசி சென்னை வந்தன – மாலை மலர்

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. தேவையான பகுதிகளுக்கு கூடுதலாக அனுப்பப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16-ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் நோய் பாதிப்புள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரையில் சுமார் 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தாமாகவே தடுப்பூசி போட முன் வருகிறார்கள்.

இதனால் அரசு மருத்துவ மனை மற்றும் மையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. மத்திய அரசு தொகுப்பில் இருந்து அனுப்பி வரும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.

தடுப்பூசி வீணாகாமல் பொதுமக்களுக்கு செலுத்த சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் 20 லட்சம் தடுப்பூசிகள் உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.

அதன் அடிப்படையில் படிப்படியாக கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இன்று மும்பையில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ஐதராபாத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறும்போது, ‘தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் செலுத்தப்பட்டு வருகிறது. தேவையான பகுதிகளுக்கு கூடுதலாக அனுப்பப்படுகிறது.

இன்று 2ž லட்சம் தடுப்பூசி வந்துள்ளன. இன்னும் 7½ லட்சம் தடுப்பூசி இன்று அல்லது நாளை வரும்’ என்றார்.

[embedded content]

Source: https://www.maalaimalar.com/news/district/2021/05/04134537/2610570/Tamil-News-Another-2-lakh-vaccines-arrived-in-Chennai.vpf