சென்னை பெரிமேடு எஸ்பிஐ வங்கியில் எப்படி கொள்ளை அடித்தோம்.. அப்படியே செய்து காண்பித்த கொள்ளையன்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை :சென்னையில் 15 இடங்களில் உள்பட தமிழகத்தின் பல்வேறு எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரிமேடு பாரத் ஸ்டேட் வங்கியில் எப்படி கொள்ளை அடித்தார்கள் என்பது இன்று போலீசாரிடம் ஏடிஎம்மில் செய்து காண்பித்தனர். இதை பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 15.06.2021 முதல் 18.06.2021 வரையில் சென்னை பெருநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் சிலர் பணம் எடுப்பது போல சென்று ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் சுமார் ரூ.45 லட்சம் பணததை திருடி சென்றனர். மொத்தம் 15 இடங்களில் நடந்துள்ளதாக அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டது,

இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.க.பா. ஆணைக்கிணங்க தியாகராயநகர் மாவட்ட துணை ஆணையர் ஹரிகிரன்பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழு ஹரியானா சென்று 9 குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறது,

குற்றவாளி கைது

தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளில் ஆய்வு செய்ததில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் மேற்படி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில், தீவிர விசாரணை செய்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அரியானா மாநிலத்தில் பதுங்கியிருந்த குற்றவாளி அமீர் அர்ஷ், என்பவரை தனிப்படையினர் 23.06.2021 அன்று கைது செய்து அவரிடமிருந்து பணம் ரூ.4.5லட்சம் பறிமுதல் செய்தனர். பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளி அமீர் அர்ஷ் என்பவரை சென்னை அழைத்து வந்து, விசாரணைக்குப் பின்னர் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காலுக்கு உட்படுத்தினர்.

வீரேந்திர ராவத்

மேலும் தனிப்படையினர் தீவிர விசாரணை செய்ததில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 9 நபர்கள் ஒருங்கிணைந்து, மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது. 9 நபர்களில் மேலும் ஒருவரின் முகாந்திரம் தெரியவந்ததின் பேரில் தனிப்படையினர் அரியானா மாநிலம் சென்று அரியான மாநில காவல் துறையினிருடன் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி, இவ்வழக்கில் தொடர்புடைய அரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர ராவத் (வயது 23) என்பவரை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டை

குற்ற வழக்கில் 9 நபர்கள் ஒரே குழுவாக ஒருவரின் தலைமையில் செய்துள்ளனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் கிடைக்க பெற்று உள்ளதால், தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்தில் முகாமிட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

9 குற்றவாளிகள்

இதுவரை, சென்னையில் 15 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள 9 குற்றவாளிகள், மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 குற்ற நிகழ்வுகளிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 1 குற்ற நிகழ்வுகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுவரை 45 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பபட்டவர்களிடம் இருந்து 4.5 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே போலீஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெரிமேடு எஸ்பிஐ வங்கியில் எப்படி கொள்ளை அடித்தோம்.. அப்படியே செய்து காண்பித்த கொள்ளையன்!

செய்து காண்பித்தான்

இதனிடையே தனிப்படை போலீசார் மற்றும் பெரிமேடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இன்று சென்னை பெரிமேடு பாரத் ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் கொள்ளையர் அமீர் அர்சத் கொள்ளையடித்தது எப்படி என்று ஆய்வுகள் நடத்தினர். அப்போது கொள்ளையன் அமீர் அர்சத் எப்படி கொள்ளை அடித்தோம் என்று செய்து காண்பித்தார்.

English summary
How did we rob SBI Bank in Chennai Perimedu ..? The robber who did it!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-atm-theft-how-did-we-rob-sbi-bank-atm-in-chennai-perimedu-425423.html