சென்னை ஐ.ஐ.டி.யில் தலைவிரித்தாடும் ஜாதி- பணியில் இருந்து வெளியேறுவதாக பேராசிரியர் விபின் கடிதம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஐ.ஐ.டியில் ஜாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுவதால் தாம் பணியில் இருந்து வெளியேறுவதாக உதவிப் பேராசிரியர் விபின் புதியதாத் கடிதம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டியில் கல்வி கற்க வேண்டும்; பணிபுரிய வேண்டும் என்பது பலரது கனவு. இதற்காக மிகப் பெரும் சவால்கள், போராட்டங்களை எதிர்கொண்டு கல்வி கற்கவும் பணிக்காகவும் சென்னை ஐ.ஐ.டிக்குள் நுழைகின்றனர்.

'கணிதப் புலி' முனைவர் வசந்தா கந்தசாமியின் போராட்டத்துக்கு வெற்றி- சென்னை ஐஐடி ஜாதிவெறிக்கு மரண அடி!‘கணிதப் புலி’ முனைவர் வசந்தா கந்தசாமியின் போராட்டத்துக்கு வெற்றி- சென்னை ஐஐடி ஜாதிவெறிக்கு மரண அடி!

ஆனால் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமும் வளாகமும் ஒட்டுமொத்த மனிதகுலத்தில் அன்னியப்படுத்தப்பட்ட ஒரு தீவு தேசமாகவே இருக்கிறது. ஜாதி, வர்க்கம், மதம் என அனைத்திலும் பேதம், ஏற்றத்தாழ்வு பார்க்கிற- இதனடிப்படையில் இழிவு செய்கிற அல்லது ஒடுக்குமுறையை ஏவிவிடுகிற கூட்டத்தின் பிடியில்தான் சென்னை ஐ.ஐ.டி. காலந்தோறும் இருந்து வருகிறது.

பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?பாத்திமாவுக்கு என்னதான் நடந்தது.. செல்போனை ஆன் செய்தவுடன் வந்த மெசேஜ்.. நிஜம் வெளியே வருமா?

குறிப்பிட்ட ஜாதி ஆதிக்கம்

ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கவும் பணி புரியவுமான கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டியை குத்தகைக்கு காலந்தோறும் எடுத்துக் கொள்கிற அகம்பாவ மனோபாவம் ஓய்ந்ததே இல்லை. உலகம் போற்றிய கணிதமேதை பேராசிரியர் வசந்தா கந்தசாமி, தான் உயர் ஜாதியை சேர்ந்தவர் இல்லை என்பதாலேயே அவரை பணிக்காலம் முழுவதும் பாடாய்படுத்திய கொடுமை 1990களில் நிகழ்ந்தது.

பேராசிரியர் வசந்தா கந்தசாமி

பேராசிரியர் வசந்தா கந்தசாமிக்காக எத்தனையோ களப் போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள் நிகழ்ந்தன. இப்படி போராடி போராடி தமக்கான நீதியை பெற்ற வசந்தா கந்தசாமி அம்மையாருக்கு 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கி பெருமைப்படுத்தினார்.

பாத்திமா லத்தீப் மர்ம மரணம்

அதேபோல் ஜாதி, வர்க்க, மத ரீதியான சக ஆதிக்க ஜாதி மாணவர்களின் ஒடுக்குமுறை, அவர்களுடன் கை கோர்க்கும் பேராசிரியர் சமூகம் இவற்றால் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நிகழும் தற்கொலைகளில் ஒன்றிரண்டுதான் வெளி உலகத்துக்கு தெரியவருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம் நாட்டையே உலுக்கி எடுத்தது.

பேராசிரியர் விபின்

இந்த வரிசையில் இப்போது உதவிப் பேராசிரியரான விபின் புதியதாக இணைந்திருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம், ஜாதி ரீதியான பாகுபாட்டை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதால் தம்மால் இங்கு பணிபுரியவே இயலாத நிலை உருவாகிவிட்டது; ஆகையால் தாம் பணியில் இருந்து வெளியேறுகிறேன் என்று இ மெயில் மூலம் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு பேராசிரியர் விபின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Madras IIT again faced Caste discrimination and Prof. Vibin resigned from his post.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-iit-prof-resigns-against-casteism-in-institute-425739.html