வரலாறு முக்கியம்.. அதுவும் சென்னைக்கு.. அமையப்போகும் சூப்பர் பூங்கா.. அதுவும் எங்கு தெரியுமா? – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை : தமிழ்நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பேரை பறிகொடுத்த ஊர் என்றால் அது சென்னை தான். மூச்சுக்காற்றும் மூக்கில் செல்ல முடியாது போன உயிர்கள் மிக அதிகம். இந்நிலையில் சென்னை மின்ட் பாலத்தின் கீழ் கொரோனா நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட பணிகள் நடந்து வருகிறது.

கொரோனா முதல் அலை மோசமாக பாதித்த சென்னை தான் இரண்டாவது அலையிலும் மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் முதல் அலையில் திணறிய சென்னை, இரண்டாவது அலையில் வேகமாகவே மீண்டுவிட்டது. ஆனாலும் சென்னையில் கடந்த ஓராண்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஏராளமானோரின் வாழ்வாதாரம் நிலைகுலைந்து போனத. எப்போது சீராகும் என்பது இயற்கைகே வெளிச்சம். இன்று வரை விடியல்கள் பலருக்கும் தெரியவில்லை. சரி அதைவிடுங்கள் சொல்ல வந்ததை சொல்விடுகிறேன்.

கொரோனா நினைவிடம்

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் சென்னையில்தான் அதிகம் ஏற்பட்டது. இந்த பேரிடரை வருங்கால சந்ததியினருக்கு தெரிவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா நினைவிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

3 ஏக்கர் நிலம்

சென்னை மாநகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு அனைத்து வகையான பொருட்களையும் மலிவு விலையில் விற்பதற்காக அம்மா வாரச்சந்தை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக மின்ட் பாலத்தின் கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டது.

நேரில் ஆய்வு

அந்த இடத்தில் கொரோனா நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நினைவிடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் டி.சினேகா ஆகியோர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

வரலாறு முக்கியம்

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் , “நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்கவிருப்பது தொடர்பாகவும், அந்தபூங்காவில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்தும் விரைவில் ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற போகிறது. ஒரு வாரத்துக்குள் இத்திட்டம்முழு வடிவம் பெற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது” என்றார். வருங்கால சந்ததிகள் கொரோனாவை பற்றியும், அதன் பாதிப்பை பற்றியும் அறியும் வகையில் பூங்கா இருக்கும் என்று சொல்லப்படுகிறது. வரலாறு முக்கியம்..!

English summary
Chennai Corporation Commissioner Gagandeep Singh Bedi has decided to set up a park with a corona memorial under the Chennai Mint Bridge. Plans are underway for this.

Source: https://tamil.oneindia.com/news/chennai/covid-park-to-be-built-under-the-chennai-mint-bridge-super-info-427399.html