இ.பி.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆஜராகும்படி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அ.தி.மு.க ஆட்சியில். பொதுமக்களின் மனநிலை குறித்தும், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயகுமார் குறித்தும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2020 நவம்பரில் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில அவதுாறு வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகள்
நீதிபதி டி.சிவகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தன.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு.. சென்னை மீண்டும் முதலிடம்.. இந்த 4 மாவட்டங்களில் தொற்று அபாயம்!தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பு.. சென்னை மீண்டும் முதலிடம்.. இந்த 4 மாவட்டங்களில் தொற்று அபாயம்!

இந்த வழக்கில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே மூன்று முறை சம்மன் அனுப்ப, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அப்போது மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் சம்மன் அனுப்ப நீதிபதி டி.சிவகுமார் உத்தரவிட்டார். இதன்படி வருகிற 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

English summary
A Chennai court has ordered Chief Minister MK Stalin to appear in the case of former Chief Minister Edappadi Palanisamy

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-special-court-has-ordered-tamilnadu-cm-mk-stalin-to-appear-in-the-case-of-former-cm-eps-429690.html