சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா உறுதி.. 103 பேருக்கு பரிசோதனை – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 103 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மூடப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில்
5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 மாணவனுக்கு வைரஸ் தொற்று உறுதி,
வல்லிபுரம் உயர்நிலை பள்ளியில் 1 மாணவிக்கும், மதுராந்தகம் அரசு உதவி பெறும் இந்து மேல்நிலைப் பள்ளியின்
2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவிகளுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் 1 மாணவிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு முன்வந்தது.

பள்ளிகள் திறப்புக்கு பின்னர் தமிழகத்தில் இதுவரை 24 மாணவர்கள் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தனியார் பள்ளிகளில் கொரோனா தொற்று சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்ட பள்ளியினை மூடவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

English summary
A girl tested positive for coronavirus in private school Alwarpet, Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/a-girl-tested-positive-for-coronavirus-in-private-school-alwarpet-432270.html