சென்னை சாலையில் ஆட்டோ ஓட்டிய டென்மார்க் அமைச்சர்… இதுதான் காரணம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: காற்றாலை துறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழகம் வந்துள்ள டென்மார்க் அமைச்சர் எலக்ட்ரிக் ஆட்டோவை இயக்கி மகிழ்ந்தார். இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாததால் அது பசுமை ஆட்டோ என அழைக்கப்படுகிறது.

தமிழகம்- டென்மார்க் கூட்டமைப்பில் கடலில் காற்றாலை உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த டென்மார்க் நாட்டின் பருவநிலை துறை, மின்சக்தி துறைக்கான அமைச்சர் டான் ஜானிக் ஜோர்ஜென்சென் உள்ளிட்டோர் 50 பேர் சென்னை வந்துள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த தொழிற்துறை பிரதிநிதிகளில் இத்தனை பேர் வந்துள்ளது டென்மார்க் நாட்டிலிருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவு
(கடலில் மிதக்கும் காற்றாலை பூங்கா) ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவுபெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு

இந்தியாவுடன் டென்மார்க்

இதுகுறித்து இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் பிரெட்டி ஸ்வானே கூறுகையில் எங்களது திட்ட அறிக்கைகள் எல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன. எங்களுக்கு ஆதரவான பதிலை தமிழக முதல்வர் அளித்தால் நாங்கள் உடனடியாக பணிகளை தொடங்கும். அது போல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் வரவழைப்போம்.

5 பில்லியன் டாலர்

இந்த திட்டம் மிகப் பெரிய திட்டமாகும். இதில் 5 பில்லியன் முதல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேனிஷ் பிரதமர் மெட்டி பிரெட்டிக்சென் ஆகியோருக்கும் இடையே பசுமை மின்சக்தி திட்டங்கள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் ஒரு பகுதிதான் தமிழக முதல்வருடன் போடப்படும் ஒப்பந்தங்களும் ஆகும்.

கடலில் மிதக்கும் காற்றாலை

ஆற்றல் தீவு அல்லது முதல் கடலில் மிதக்கும் காற்றாலை பூங்கா இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும். இந்தியாவில் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்றார். அவர் கடந்த மார்ச் மாதம் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் ஆரம்ப கட்ட ஆலோசனைகளை நடத்தினார்.

ஆட்டோ

அப்போது மன்னார் வளைகுடா பகுதியில் இந்த காற்றாலை திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க இது தமிழக அரசின் உடனடி செயல்திட்டமாகும். தமிழகத்தில் டென்மார்க் நாட்டின் சார்பில் நிறைய முதலீடுகள் செய்யப்படும் என தெரிவித்தனர். அது போல் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 751.72 மில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. டென்மார்க் அமைச்சர், தூதர், தூதரக அதிகாரிகள் சென்னை வந்ததன் ஒரு பகுதியாக தமிழகத்தில் எலக்ட்ரிக் ஆட்டோவை இயக்கினார் அமைச்சர் ஜோர்கன்சன்.

தீவுகள்

மன்னார் வளைகுடா பகுதிகளிலும் அங்குள்ள தீவுகளிலும் முதல் கட்டமாக காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. தமிழகத்தில் காற்று அதிகம் வீசக் கூடிய கடற்கரைகளை தேர்வு செய்து அங்கும் காற்றாலைகளை அமைக்கிறார்கள். டென்மார்க்கில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளன. அது போல் தமிழகத்திலும் உருவாக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. பசுமை மின்சக்தி அதிகரிக்கப்பட்டு இவை வாகனங்களில் பயன்படுத்தப்படும் போது பெட்ரோல் டீசலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

English summary
Denmark Minister Climate Minister Dan Jannik Jorgensen drives the auto made in Chennai today.

Source: https://tamil.oneindia.com/news/chennai/denmark-minister-ride-in-auto-in-tamilnadu-432359.html