ஆரம்ப பள்ளிகள் திறப்பு: ஹை கோர்ட் புதிய உத்தரவு! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு இது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

பிடிஆர் பதவி காலி? ஸ்டாலின் எடுக்கும் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன்!

தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவை வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி ‘சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்’ என்ற அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.












இபிஎஸ் காலில் விழுந்த ராஜேந்திர பாலாஜி – பின்னணி தகவல் ?

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1 முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல், அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஸ்டாலின் மருமகனின் கொங்கு ஆபரேஷன்: அதிமுக மாஜிக்களுக்கு கொக்கி!

இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் நீதிபதி, “சில வாரங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆகையால் பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்” என அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/madras-high-court-has-directed-tn-govt-to-start-the-midday-meal-scheme-immediately-after-the-schools-reopen/articleshow/86502324.cms