இந்தியா vs பாகிஸ்தான் : வெறுப்பரசியலை ஒதுக்கி வரலாற்றில் இடம்பிடித்த சென்னை ரசிகர்கள்! #Flashback – Kalaignar Seithigal

சென்னைச் செய்திகள்

டி20 உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

‘போர்….ஆமாம்…போர்’ என்கிற ரீதியில் வெறித்தனமான ப்ரொமோஷன்களும் ரசிக சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வெறுப்பரசியல் இன்னொரு பக்கம்.

இந்திய அணி மற்ற அணியோடு மோதும்போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும்போது மட்டுமே இந்திய வீரர்களுடன் இந்திய அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் பாகிஸ்தான் வீரர்களுடன் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் சேர்ந்து மோதிக்கொள்கின்றனர். அவர்கள் மோதிக்கொள்ளட்டும். ஆனால், அதைச் சுற்றிப் பரப்பப்படும் ஒரு போலி தேசியவாதத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் இரு நாட்டு ரசிகர்களும் இரையாவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு கிரிக்கெட் கிரிக்கெட்டாக மட்டுமே அணுகப்பட வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பின்னோக்கிச் சென்று அசைபோட்டு பார்ப்போம்.

ஜனவரி 1999. வழக்கம்போல இந்தியா-பாகிஸ்தான் இடையே உரசல் காணப்பட்ட காலகட்டமே. (மே மாதம் கார்கில் போர்)

ஜனவரியில் வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவில் தொடர் ஆட வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் போட்டியே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களுடனான மீட்டிங்கில் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுப் பேசுகிறார். ‘நாம் இந்தியாவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆடப் போகிறோம். நம்முடைய பெர்ஃபார்மென்ஸை ரசிகர்களின் ரியாக்ஷனை வைத்தே அளவிட்டுக் கொள்ள முடியும். ரசிகர்கள் ரொம்பவே அமைதியாக சலனமே இல்லாமல் இருந்தால் நாம் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறோம் என அர்த்தம். அதுவே, ரசிகர்கள் கூச்சலும் ஆரவாரமுமாக இருந்தால் நாம் மோசமாக ஆடுகிறோம் என்று எடுத்துக் கொள்ளலாம்’ எனக் கூறியிருக்கிறார்.

அதாவது, இந்திய ரசிகர்கள் எப்படியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்பது வாசிம் அக்ரமின் எண்ணம். ஆனால், நடந்தது வேறு.

Source: https://www.kalaignarseithigal.com/sports/2021/10/24/pakistan-cricket-team-got-a-standing-ovation-at-chennai-in-1999