சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் சசிகலா – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து 2-வது கட்டமாக நிவாரண உதவிகளை வழங்கினார் சசிகலா

Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?Exclusive; இன்னும் 5 நாட்கள்தான் இருக்கு.. புதிர் போட்டு பேசிய தமிழ்நாடு வெதர்மேன்.. என்ன நடக்கும்?

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முதல் கட்ட பயண

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கடந்த 12ம் தேதி வி.கே. சசிகலா சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர், வள்ளுவர்கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இன்று மீண்டும் பார்வையிட்ட சசிகலா

அதன் தொடர்ச்சியாக இன்று பெசன்ட் நகரில் உள்ள ஊரூர் குப்பம், அடையாறு, இந்திரா நகர், ஐஸ்வர்யா காலனி, நீலாங்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நகர், ஆகிய இடங்களில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஒவ்வொரு இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அரிசி, பருப்பு அடங்கிய மளிகை பொருட்கள் மற்றும் புடவை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை சசிகலா வழங்கினார்.

முதலில் தயங்கிய சசிகலா

முன்னதாக சசிகலாவின் ஆதரவாளர்கள் பல முறை வலியுறுத்தியும் வெள்ள பாதிப்பு பகுதிகளில் பயணம் மேற்கொள்ள சசிகலா தயங்கி இருந்தார். ஆனால் ஆதரவாளர்களின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்தே கடந்த 12-ந் தேதி சசிகலா முதல் கட்ட பயணம் மேற்கொண்டார்.

டிடிவி தினகரனுடன் மல்லுக்கட்டு

இப்படி சசிகலா அடுத்த கட்ட அரசியல் பயணம் மேற்கொள்வதை தடுக்க அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு தடுக்க முயற்சித்தது. சசிகலாவின் உடல்நிலை காரணம் காட்டி வாதிட்டுப் பார்த்தது தினகரன் தரப்பு. ஆனால் சசிகலாவோ, அமமுகவை கலைத்துவிட்டால் எந்த பிரச்சனையுமே இல்லையே.. அப்படி செய்யாமல் இருப்பதுதான் அதிமுகவுக்குள் நுழைவதற்கு தடையாக இருக்கிறது என தினகரனிடம் சீறியிருக்கிறார் என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்திருந்தோம். இதன்பின்னர் மூன்று விவசாய சட்டங்களை பிரதமர் மோடி ரத்து செய்த அறிவித்த போது, சசிகலா, அஇஅதிமுக பொதுச்செயலாளர் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Sasikala today again visited Rain hit areas in Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/sasikala-again-visit-rain-hit-areas-in-chennai-439839.html